அடுத்தவர்களுடன் பகிர்ந்து வாழ வேண்டும் என்று நாம் சிறு பிள்ளைகளுக்கு சொல்லி தருவது உண்டு. இனிமேல் அதற்கு உதாரணமாக ஜெர்மனியை தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஷேரிங் என்பது அக்கறை என்ற பழமொழியை ஜெர்மானியர்கள் மிகவும் சீரியஸாக எடுத்து கொண்டு பின்பற்றி பிற நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றனர்.
நன்கு வேலை செய்யும் நிலையில் இருந்தாலும் கூட பழைய பொருட்களை ஜெர்மனி மக்கள் இலவசமாகவே கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் அடைந்திருக்கும் இடம் காலியாவதோடு, அந்த பொருளை எடுத்து செல்பவர் அதே பொருளை கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் இன்னும் சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்கு ஏற்படாது என்பது அந்நாட்டு மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
உள்ளூர் ஊடகங்களின்படி சமீபத்தில் பேர்லினில் வசிக்கும் ஆல்பிரெக்ட் ட்ரூபர் என்பவர் தனது சைக்கிளை ரிப்பேர் செய்து அதே ஏரியாவில் வசித்த ஒருவருக்கு முற்றிலும் இலவசமாக கொடுத்து உள்ளார். தோட்டத்தை சீர்படுத்தும் கருவிகள் முதல் குழந்தைகளுக்கான பொம்மைகள் வரை அனைத்தையும் வசதி படைத்தவர்கள் தேவைப்படுவோருக்கு இலவசமாக கொடுப்பது அங்கு வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.
நம் நாட்டிலும் செகண்ட் ஹேண்ட் பொருட்களை உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களுக்கு கொடுக்கும் பழக்கம் இருந்தாலும், பெயரளவிற்காவது கொஞ்சம் பணம் வாங்கி கொண்டு தான் பெரும்பாலானோர் கொடுப்பார்கள். இலவசமாக கொடுப்பவர்களை விரல் விட்டு எண்ணலாம். ஆனால் ஜெர்மனியில் செகண்ட் ஹேண்ட் பொருட்களை இலவசமாக கொடுப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்பது தான் ஹைலைட். ஒரு சிலர் கார்கள், இ-ஸ்கூட்டர்களை கூட இலவசமாக வழங்குகிறார்கள்.
ஜெர்மன் மீடியா நிறுவனமான ஊடக நிறுவனத்தின் கருத்துப்படி, nebanan.de எனப்படும் ஆன்லைன் பிளாட்ஃபார்ம் மூலம் மக்கள் தங்கள் பொருட்களை தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த வெப்சைட் 16 லட்சத்திற்கும் அதிகமானயூஸர்களை கொண்டுள்ளது, தோராயமாக 1 லட்சம் பேர் தொடர்ந்து வெப்சைட்டில் ஆக்டிவாக உள்ளனர். Nebanan.de ஒரு பைசா கூட வசூலிக்காமல், வாங்குபவர்களையும் விற்பவர்களையும் மீடியம் மூலம் கனெக்ட்டாக அனுமதிக்கிறது. இந்த வெப்சைட்டை இயக்க நிறுவனம் நன்கொடைகள் மற்றும் தொண்டு பணத்தை பயன்படுத்துகிறது.
நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான கிறிஸ்டியன் வோல்மன் இந்த முயற்சிக்கு குட் ஹூட் என்று பெயரிட்டுள்ளார். இந்த முயற்சி பற்றி கூறியுள்ள இவர், ஒவ்வொரு நாளும் நாங்கள் வயதுக் குழுக்கள், சமூக அடுக்குகள் மற்றும் ஆர்ஜின் ஆகியவற்றில் அருகில் வசிப்போரை இணைப்பதில் வேலை செய்கிறோம். நிச்சயமற்ற உலகளாவிய சூழலில் இது ஒரு உண்மையான தேவையாக மாறியுள்ளது. சந்தையில் முன்னணி டிஜிட்டல் சமூக வலைப்பின்னல்களை ஐரோப்பாவில் உருவாக்க முடியும் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம் என்றார்.