இந்த நாட்களில் திருமணங்களைத் தீர்ப்பதில் ஒரு நபரின் சம்பளம் முக்கியமானது. அதிக சம்பளம் வாங்கும் ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பதே இன்றைய நிலையாக உள்ளது. இந்நிலையில், மேட்ரிமோனியல் தளங்களில் வரன்களை தேடும் போது சம்பளத்துக்கு எவ்வளவு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்ற தலைப்பில் வெளியான ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. Shadi.com இந்த ஆய்வை அறிக்கையாக வெளியிட்டுள்ளது
மாத சம்பளம் ரூ.2.5 லட்சத்துக்கும் மேல் சம்பாதிப்பவர்கள் (வருடத்துக்கு ரூ.30 லட்சத்துக்கும் அதிகம்)
திருமண வலைதளங்களில் ஹீரோக்கள் என சொல்லப்படுபவர்கள் இந்த லிஸ்டில்தான் உள்ளார்கள். மாதம் 2.5 லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கும் ஆண்களின் திருமணம் என்பது மற்ற ஆண்களை திருமணத்தை காட்டிலும் 192% வேகமாக நடந்து முடியும். அதாவது முதல் தேர்வே இந்த லிஸ்டில் இருப்பவர்கள்தான். இதே சம்பளத்தை வாங்கும் பெண்களாக இருந்தால் அவர்கள் மற்ற பெண்களை விட வெறும் 17% வேகத்தில்தான் திருமண பந்தத்தில் இணைகின்றனர்.
மாத சம்பளம் ரூ.1.25 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை (வருடத்துக்கு ரூ.15 லட்சம் டூ ரூ.30 லட்சம் வரை)
வருடத்துக்கு ரூ.30 லட்சம் வரை அதிகமாக சம்பாதிக்கும் ஆண்களின் திருமணம் என்பது மற்ற ஆண்களை திருமணத்தை காட்டிலும் 130% வேகமாக நடந்து முடியும். இதே சம்பளத்தை வாங்கும் பெண்களாக இருந்தால் அவர்கள் மற்ற பெண்களை விட வெறும் 27% முன்னிலையில் உள்ளனர்.
மாத சம்பளம் ரூ.83,333 முதல் ரூ.1.25 லட்சம் வரை (வருடத்துக்கு ரூ.10 லட்சம் டூ ரூ.15 லட்சம் வரை)
வருடத்துக்கு ரூ.15 லட்சம் வரை அதிகமாக சம்பாதிக்கும் ஆண்களின் திருமணம் என்பது மற்ற ஆண்களை திருமணத்தை காட்டிலும் 130% வேகமாக நடந்து முடியும். இதே சம்பளத்தை வாங்கும் பெண்களாக இருந்தால் அவர்கள் மற்ற பெண்களை விட வெறும் 27% முன்னிலையில் உள்ளனர்.
மாத சம்பளம் ரூ.58333 முதல் ரூ.83333 லட்சம் வரை (வருடத்துக்கு ரூ.7 லட்சம் டூ ரூ.10 லட்சம் வரை)
வருடத்துக்கு ரூ.10 லட்சம் வரை அதிகமாக சம்பாதிக்கும் ஆண்களின் திருமணம் என்பது மற்ற ஆண்களை திருமணத்தை காட்டிலும் 7% வேகமாக நடந்து முடியும். இதே சம்பளத்தை வாங்கும் பெண்களாக இருந்தால் அவர்கள் மற்ற பெண்களை விட 7% முன்னிலையில் உள்ளனர்.