ஏமனில் கடுமையான ஊட்டசத்து குறைபாடு... இதயத்தை நொறுக்கும் 7 வயது சிறுவனின் புகைப்படங்கள்
ஏமனில் பஞ்சம் ஒரு போதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அங்கு சுமார் 6 ஆண்டுகளாக நிலவும் யுத்தத்தால் 80 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Web Desk | January 6, 2021, 10:03 PM IST
1/ 5
ஏமனில் நிலவும் பஞ்சம் காரணமாக அங்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு நிலவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரது இதயத்தை நொறுக்கி உள்ளது.
2/ 5
ஏமனில் பஞ்சம் ஒரு போதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அங்கு சுமார் 6 ஆண்டுகளாக நிலவும் யுத்தத்தால் 80 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா-வின் பொருளாதார உதவியை நம்பியே பலர் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
3/ 5
ஏமன் தலைநகர் சனோவில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் 7 வயது சிறுவன் ஃபெய்ட் சமீம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 7 கிலோ மட்டுமே எடை இருந்த சமீம் மருத்துவமனை சிகிச்சைக்கு பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
4/ 5
7 வயது சிறுவன் ஃபெய்ட் சமீம்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகையில், “சிறுவன் இறக்கும் தருவாயில் தான் இங்கு வந்தார். ஆனால் கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவரது உடல்நிலை முன்னேறி வருகிறது. சமீம் பெருமூளை வாதம் மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்“ என்றார்.
5/ 5
ஏமனில் கடந்த 2015 முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 2018-ம் ஆண்டுக்கு பிறகு கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ஏமனில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.