பிபா கால்பந்து இறுதி போட்டியில் கத்தார் ஆட்சியாளரும் பிபா கூட்டமைப்பின் தலைவர் இருவரும் இணைந்து மெஸ்ஸிக்கு அரபிய அங்கியான Bisht-ஐ அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நாட்டின் வரலாற்றை தாங்கிப்பிடிக்கும் ஜெர்சியின் மேல் அரபிய அங்கியை அணிவித்ததை அர்ஜெண்டினியர்கள் விமர்சித்து வருகின்றனர். அப்படி அந்த ஜெர்சியின் வரலாற்று பெருமை என்ன என்பதை பார்க்கலாம்.
இதையடுத்து அந்த சாம்ராஜ்ஜியத்தில் செயின்ட் மேரியின் வழிபாடு எழுச்சி பெற்றது. செயிண்ட் மேரியை கலைஞர்கள் நீல நிற ஆடையில் உருவகப்படுத்தினர். கடவுளுக்கு நிகராக வணங்கப்படும் மேரியை உயர்த்த நீல நிறம் தேவைப்பட்டது. மேரியின் ஆடைகளுக்கு நீலத்தைப் பயன்படுத்துவது விரைவில் கலை மற்றும் மத பாரம்பரியத்தின் முக்கிய சடங்காக மாறியது.
இதனால் மகிழ்ச்சியடைந்த சார்லெஸ், 1771 ஆம் ஆண்டு ‘ஆர்டர் ஆஃப் சார்லஸ் -III’ என ஒரு சட்டத்தை உருவாக்கினார். அதன்படி பல்வேறு ஆர்டர்கள் பிரிக்கப்படும். அதில் அரசர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள் போன்றவர்கள் புனித ஆர்டரில் வருவார்கள். அவர்கள் அணிய வேண்டிய நிறம் நீலம். தனது மகனுக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டுமென மூன்றாம் சார்லெஸ் புனித மேரியிடம் பல ஆண்டுகள் பிரார்த்தனை செய்தார். எனவே அவரது புதிய ஆர்டரின் வண்ணங்களுக்கு, சார்லஸ் நீலத்தைத் தேர்ந்தெடுத்தார். அதில் நீலம் மற்றும் வெள்ளை நிறம் இடம்பெற்றிருக்கும்.
ஸ்பெயினில் மட்டுமல்ல, அர்ஜென்டினா பகுதிகளில் இது கிளர்ச்சிகளைத் தூண்டியது. ஸ்பெயினின் உண்மையான மன்னருக்கு தங்கள் விசுவாசத்தைக் காட்டவும் போனபார்ட்டிஸ்ட் போராளிகளிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ளவும் அர்ஜென்டினா கிளர்ச்சியாளர்கள், ஆர்டர் ஆஃப் சார்லஸ் -III யில் பயன்படுத்தப்பட்ட வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறங்களை அணிந்தனர்.
புரட்சிகர அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக Cockade-ஐ ஏற்றுக்கொண்டது. பெல்கிரானோ சில நாட்களுக்குப் பிறகு அர்ஜென்டினாவின் கொடியை வடிவமைத்தார். அதிலும் அதே வண்ணங்களைப் பயன்படுத்தினார். அரசாங்க மாற்றங்கள், போர்கள் என முடிந்து பல ஆண்டுகள் கழிந்த பிறகு, பெல்கிரானோவின் வடிவமைப்பு 1816 இல் சுதந்திர அர்ஜென்டினாவின் அதிகாரப்பூர்வ கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1818 இல் சூரியன் சேர்க்கப்பட்டது.
பின்னர், 1880களில் கால்பந்து விளையாட்டு அர்ஜென்டினாவிற்கு, பிரிட்டிஷ் ரயில் பணியாளர்கள் வழியாக வந்து சேர்ந்தது. அவர்கள் அதை உள்ளூர் மக்களுக்குக் கற்று கொடுத்தனர். 1891 வாக்கில் அர்ஜெண்டினா தனது முதல் லீக்கை (உலகின் 5 வது பழமையானது) நிறுவினர். அர்ஜென்டினா தேசிய அணி 1902 இல் உருகுவேக்கு எதிரான முதல் போட்டியில் வெளிர் நீல நிற சட்டையுடன் களமிறங்கியது.
இதனால்தான் அர்ஜெண்டினாவின் இந்த புனித ஆடையின் மேல், மெஸ்ஸி அரேபியாவின் அங்கியை அணிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு பக்கம் அரசர்களுக்கு அணிவிக்கப்படும் அங்கியை மெஸ்ஸிக்கு அணிவித்தது தவறு என அரேபியர்களும் குமுறிக்கொண்டிருக்கின்றனர். உலகின் இரு துருவங்களில் நூற்றாண்டுகளாக ஊற்றெடுத்த கலாச்சாரம், 21ஆம் நூற்றாண்டில் ஒரு புள்ளியில் இணைந்து இவ்வளவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் என யாரும் கணித்திருக்க மாட்டார்கள்.