முகப்பு » புகைப்பட செய்தி » ட்ரெண்டிங் » நாய்கள் எப்போதும் கம்பங்கள், கார் டயர்களில் சிறுநீர் கழிப்பது ஏன் தெரியுமா? இப்படியான காரணங்கள் இருக்கு!

நாய்கள் எப்போதும் கம்பங்கள், கார் டயர்களில் சிறுநீர் கழிப்பது ஏன் தெரியுமா? இப்படியான காரணங்கள் இருக்கு!

நாய்களின் இந்த நடவடிக்கை கண்டிப்பாக தற்செயலானதொரு பழக்கம் அல்ல; நாய்கள் இப்படி செய்ய ஒரு காரணம் அல்ல, மொத்தம் மூன்று காரணங்கள் உள்ளன

  • 15

    நாய்கள் எப்போதும் கம்பங்கள், கார் டயர்களில் சிறுநீர் கழிப்பது ஏன் தெரியுமா? இப்படியான காரணங்கள் இருக்கு!

    என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? நாய்கள் ஏன் சிறுநீர் கழிக்க பெரும்பாலும் மின் கம்பங்கள், வாகன டயர்களை தேர்ந்தெடுக்கின்றன. இதற்கு பின்னால் ஏதாவது காரணம் இருக்குமா? இல்லை நாய்களுக்கு மத்தியில் இது தற்செயலாக உருவான ஒரு பழக்கமா? நாய்களின் இந்த நடவடிக்கை கண்டிப்பாக தற்செயலானதொரு பழக்கம் அல்ல; நாய்கள் இப்படி செய்ய ஒரு காரணம் அல்ல, மொத்தம் மூன்று காரணங்கள் உள்ளன

    MORE
    GALLERIES

  • 25

    நாய்கள் எப்போதும் கம்பங்கள், கார் டயர்களில் சிறுநீர் கழிப்பது ஏன் தெரியுமா? இப்படியான காரணங்கள் இருக்கு!

    நாய்களின் இந்த நடத்தை குறித்து நாய் நிபுணர்கள் மிகவும் முழுமையான ஆய்வு ஒன்றை செய்துள்ளனர், அதன் ஆய்வின் அடிப்படையில் அவர்களுக்கு கிடைத்த மூன்று காரணங்கள் இதோ:

    MORE
    GALLERIES

  • 35

    நாய்கள் எப்போதும் கம்பங்கள், கார் டயர்களில் சிறுநீர் கழிப்பது ஏன் தெரியுமா? இப்படியான காரணங்கள் இருக்கு!

    1. கம்பம் அல்லது டயரில் சிறுநீர் கழிப்பதன் மூலம் நாய்கள் தங்கள் ஏரியாவை 'மார்க்' செய்கின்றன; அதாவது இது என்னுடைய இடம் என்று சிறுநீர் மூலம் குறிக்கின்றன. இது அவர்களின் மற்ற "தோழர்களை" தொடர்புகொள்வதற்கான ஒரு வழியும் கூட. ஒரு நாய் ஒரு கம்பத்திலோ அல்லது டயரிலோ சிறுநீர் கழிக்கும் போது, ​​அந்த கம்பம் தூண் அல்லது அந்த டயரில் உள்ள சிறுநீர் வாசனையை கண்டறியும் மற்ற நாய்களுக்கு அது ஒரு தகவல் ஆகும். அதை தொடர்ந்து புதிய நாயும் அங்கேயே தன் முத்திரை பதிக்கும்.

    MORE
    GALLERIES

  • 45

    நாய்கள் எப்போதும் கம்பங்கள், கார் டயர்களில் சிறுநீர் கழிப்பது ஏன் தெரியுமா? இப்படியான காரணங்கள் இருக்கு!

    2. நாய்கள் கிடைமட்ட பரப்புகளில் சிறுநீர் கழிப்பதை விட செங்குத்து பரப்புகளில் சிறுநீர் கழிப்பதை விரும்புகின்றன. டயர் மற்றும் கம்பத்தின் கீழ் பகுதி நாயின் மூக்கு எட்டும் தூரத்தில் உள்ளது. எனவே, அவை மற்ற நாய்களுக்கும் மூக்கு எட்டும் மட்டத்தில் தங்கள் அடையாளத்தை விட்டுச் செல்கின்றன. மேலும் ரப்பர் டயரில் நாயின் சிறுநீர் வாசனை நீண்ட நேரம் இருக்கும். மறுகையில், நாய்கள் தரையில் சிறுநீர் கழித்தால், அவற்றின் வாசனை குறுகிய காலத்தில் காணமால் போகும்.

    MORE
    GALLERIES

  • 55

    நாய்கள் எப்போதும் கம்பங்கள், கார் டயர்களில் சிறுநீர் கழிப்பது ஏன் தெரியுமா? இப்படியான காரணங்கள் இருக்கு!

    3. நாய்கள் ரப்பர் டயர்களில் சிறுநீர் கழிப்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. நாய்களுக்கு ரப்பர் வாசனை என்றால் மிகவும் இஷ்டம். அதனால் தான், டயர் வாசனையால் கவரப்பட்டு, அதன் அருகே சென்று சிறுநீர் கழித்த பின் திரும்புகின்றன.

    MORE
    GALLERIES