ஜாதக பொருத்தம் சரியாக இருக்கிறதா, இல்லையா அதில் எத்தனை பொருத்தங்கள் பொருந்தியுள்ளது என்று பார்த்த காலம் மாறிவிட்டது, அண்மையில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் திருமணத்தின் போது ஆண் பெண் இருவரும் மகிழ்ச்சியுடன் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் மணமகள், மணமகன் இருவரும் மணமேடையில் அமர்ந்து கொண்டு ஒப்பந்தத்தை படிக்கும் காட்சியும், அதன் பிறகு, மகிழ்ச்சியாக அதில் கையெழுத்திட்ட காட்சியும் பலரின் புருவங்களையும் உயர்த்தியுள்ளது. பெண்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற காலம் மாறிவிட்டது என நாம் நினைத்து கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில் இந்த வீடியோ மக்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியதென்றே சோல்ல வெண்டும். ஏனெனில் அந்த ஒப்பந்தத்தில் பல நிபந்தனைகள் போடப்பட்டிருந்தன.
இந்த ஒப்பந்தத்தில் மனைவி தினமும் சேலை மட்டுமே கட்ட வேண்டும், கணவர் இல்லாமல் இரவு நேரங்களில் பார்ட்டிக்கு செல்ல கூடாது, ஞாயிறு அன்று காலை உணவுகளை கணவர் மட்டுமே சமைக்க வேண்டும், வீட்டு உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உணவகங்களில் உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது, மாதத்திற்கு ஒரு நாள் மட்டும் பீட்சா போன்ற உணவுகளை சாப்பிடுவது, 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே ஷாப்பிங் செல்வது, தினமும் காலையில் ஜிம் செல்வது மற்றும் பார்ட்டிகளுக்கு செல்லும்போது நிறைய புகைப்படங்கள் எடுப்பது போன்ற பல நிபந்தனைகள் இடம் பெற்றிருந்தது.
இந்த வீடியோவை பார்த்த சிலர் ஆச்சரியப்பட்டாலும், இன்னும் சிலர் எரிச்சலடைந்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ஒரு இஸ்லாமியர் தனது பதிவில், இது திருமணம் அல்ல, ஒப்பந்தம். இதற்கு அவர்கள் உடுத்தியுள்ள ஷெர்வானி அடையாளமாக உள்ளது என்று கூறியுள்ளார். மற்றொருவர் எழுதிய கமெண்டில், எல்லா நிபந்தனைகளும் சரி,ஆனால் தினசரி புடவை அணிவது என்பது கொஞ்சம் அதிகமாக உள்ளது, தற்போது சுடிதார், ஜீன்ஸ் என பெண்களின் ஆடைகள் பெருகி வரும் நிலையில் இப்படியான நிபந்தனை ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு செயலாக அமையக்கூடும் என கூறியுள்ளார்.
மற்றொருவர் கூறியுள்ள கருத்து என்னவென்றால், இந்தியாவில் அனைவரும் சமம் என்ற நிலை அழிந்து தற்போது சமத்துவமின்மை காணப்படுவதாகவும், இது தமக்கு மிகுந்த வருதத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த திருமண நிகழ்வின் முடிவில் மணமகன் மணப்பெண்ணின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். மணப்பெண்ணுக்கு அன்றாட வாழ்வில் கடைபிடிக்க சிரமமான பல கட்டுப்பாடுகளை விதித்து விட்டு ஒரே ஒரு நாள் காலில் விழுந்து வணங்குவதால் எல்லாம் சரி என்று ஆகி விடுமா என பெண்ணியம் பேசும் சிலர் கொந்தளித்து வருகின்றனர்.