இந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் பல்வேறு புதிய வீரர்கள் களமிறங்கி தங்களது திறமைகளை நிரூபித்துள்ளார்கள். அதில் சிஎஸ்கே-வின் துஷார் தேஷ்பாண்டே குறிப்பிடத்தக்கவர். மகாராஷ்டிராவை சேர்ந்து துஷார் தேஷ்பாண்டே சிஎஸ்கே அணியில் இணைந்து விளையாட ஆரம்பித்ததில் இருந்தே அனைவரும் பார்வையும் அவர் மீது விழத் துவங்கி உள்ளது. குறிப்பாக சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனியின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் விளங்கி வருகிறார்.
குறிப்பாக இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் முன்னணி பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் பாராட்டத்தக்க வகையில் பந்து வீசவில்லை என்றாலும் தற்போது அவர்கள் தங்களை முன்னேற்றிக் கொண்டு ஒவ்வொரு போட்டியிலும் தங்களை மெருகேற்றி வருகிறார்கள். மேலும் இந்த ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்களின் வரிசையிலும் இடம் பெற்றுள்ளார் துஷார் தேஷ்பாண்டே. நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் இளமை காலத்தில் இருந்தே ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக வேண்டும் என்று விரும்பியுள்ளார். நான்காவது வகுப்பில் இருந்து கிரிக்கெட் பயிற்சி பெற ஆரம்பித்த அவர் ஒரு நாளைக்கு இரண்டு தடவை பயிற்சியை மேற்கொண்டு உள்ளார்.
துஷார் தேஷ்பாண்டேவின் பயிற்சியாளரான சமானினி, துஷார் எவ்வாறு சூரிய ஒளிக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொண்டார் என்பதை பற்றி கூறியுள்ளார். பள்ளி காலங்களில் இவர் சூரிய ஒளி தன் மீது படுமாறு உட்கார்ந்து தான் பாடங்களை படிப்பாராம். ஏன் என்று கேட்டதற்கு மிகவும் எளிமையான ஒரு பதிலை அளித்துள்ளார். கிரிக்கெட் விளையாடும் போது சூரிய வெப்பத்தில் தானே நாம் விளையாட வேண்டும் அதற்காகத்தான் நான் இப்போது இருந்தே என்னை தயார்படுத்திக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
எப்போதுமே நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவன் தன்னுடைய துறையில் மிகவும் சிறந்து விளங்கினாலும் அவர்கள் எப்போதுமே பணிவுடனையே இருப்பார்கள். துஷார் தேஷ்பாண்டேவின் பண்பும் அப்படிப்பட்டது தான். இவரின் தாயார் இரண்டு வருடத்திற்கு முன்புதான் உயிரிழந்துள்ளார். இதனால் மிகவும் உடைந்து போனாலும் அதிலிருந்து மீண்டு வந்து தற்போது தன்னை உலகிற்கு நிரூபித்துள்ளார்.
இதைப் பற்றி அவரது பயிற்சியாளர் கூறுகையில், “துஷாரின் தாய் இரண்டு வருடத்திற்கு முன்னர் உயிரிழந்தார். இது அவருக்கு மிகப்பெரிய வழியை ஏற்படுத்திய போதிலும் தன்னுடைய போராட்ட குணத்தினால் அனைத்து தடைகளையும் தாண்டி தற்போது தன்னுடைய சொந்த முயற்சியினால் பல்வேறு வெற்றிகளை குவித்து வருகிறார். எவ்வளவு வெற்றிகளைப் பெற்றாலும் தன்னுடைய தாயின் வார்த்தைகளை அவர் மறக்கவில்லை” என்று பயிற்சியாளர் கூறியுள்ளார்.
குறிப்பாக கொரோனா பெருந்தொற்றின் போது லாக் டவுன் சமயத்தில் கூட துஷார் தன்னுடைய பயிற்சியை கைவிடவில்லை. மேலும் தன்னுடைய உடற்பயிற்சி செய்வதற்கான உபகரணங்கள் அனைத்தையுமே மைதானத்திற்கு கொண்டு வந்து பயிற்சி செய்வாராம். கல்யாணியில் உள்ள மைதானத்தில் அனைத்து உபகரணங்களையும் கொண்டு வந்து அவர் பயிற்சி செய்வது மட்டுமல்லாமல், தன்னுடன் பயிற்சி செய்யும் அனைத்து வீரர்களையும் அவற்றை பயன்படுத்துமாறு ஊக்கப்படுத்துவாராம்.
மேலும் மற்றும் வீரர்களைப் போல மும்பைக்கு குடி பெயராமல் எவ்வாறு கடின உழைப்பின் மூலமே தொழில் முறை கிரிக்கெட் வீரராக தன்னை மாற்றிக்கொண்டு உள்ளார் என்று மிகவும் பெருமையுடன் துஷாரின் தந்தை நினைவு கூறுகிறார். ஒருவர் கிரிக்கெட் வீரராக மாற வேண்டும் எனில் கடுமையான சோதனைகளை சந்திக்க வேண்டும். நானும் சிறுவனாக இருந்தபோது கிரிக்கெட் விளையாடி உள்ளேன். ஆனால் எப்போதும் நான் ஒரு தொழில் முறை கிரிக்கெட் வீரராக மாற வேண்டும் என்று நினைத்ததில்லை என்று தந்தை கூறியுள்ளார்.
துஷார் தேஷ்பாண்டே தன்னுடைய பத்தாம் வகுப்பை முடித்ததும் தன்னுடைய கிரிக்கெட் வாழ்வை துவங்கியுள்ளார். ஒருவர் கிரிக்கெட் வீரராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனில் ஐந்திலிருந்து ஆறு வருடங்கள் கடுமையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். கல்யான் மைதானத்தில் அவர் தன்னுடைய கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். கேசி வித்யாலயா பள்ளி மாணவரான இவரை அவரது பள்ளி நிர்வாகமும் பெருமளவில் ஊக்கப்படுத்தியது. இதன் காரணமாகவே மும்பைக்கு சென்று அங்கு ஒரு பள்ளியில் சேர்ந்து தான் தன்னுடைய கிரிக்கெட் வாழ்வை தொடர வேண்டும் என்ற நிலை அவருக்கு ஏற்படவில்லை.
கடந்த மூன்று வருடங்களாக ஐபிஎல் விளையாடி வரும் துஷார் தேஷ்பாண்டே இந்த வருடம் தான் சிஎஸ்கே அணியில் இணைந்து வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளார் .முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு மும்பை அணியில் முதல் தர கிரிக்கெட்டை விளையாடிய அவர் தற்போது வரை 29 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில் மொத்தமாக 80 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 70 ரன்கள் கொடுத்ததே இவரது சிறந்த பந்துவீச்சாக தற்போது வரை உள்ளது.
“துஷார் தேஷ்பாண்டே அடிப்படையிலேயே மிகவும் நல்ல மனிதர். வேல் நகர் மைதானத்தில் இருக்கும் பணியாளர்கள் தற்போதும் துஷாரை நினைவு கூறுகிறார்கள். எனக்கு கூட துஷாருக்கு என்ன வேண்டும் என்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால் அங்கு மைதானத்தில் பணிபுரியும் அனைவருக்கும் அவருக்கு என்ன வேண்டும் என்பது தெரியும். ஒரு தந்தையாக எனக்கு துஷாரை நினைத்து பெருமையாக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.