புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர் கேட்டி ஹேலண்ட். இவர் மார்பக புற்றுநோயால் அவதிபட்டு வந்துள்ளார். இதற்காக இவருக்கு கீமோதெரபி சிகிச்சைமுறை அளிக்கப்பட்டுள்ளது. கீமோதெரபி மிகவும் கடுமையானவை. இந்த சிகிச்சை முறையில் மிகுந்த வலிகளை தாங்க வேண்டும். இந்த சிகிச்சை முறையின் இரு கட்டத்தை கேட்டி ஹேலண்ட் எட்டியுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் சிகிச்சை முடிந்து அவர், நலமாக வந்து ட்விட்டரை பார்க்கும் பொழுது தான் உலகம் முழுமையும் வைரலாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கடைசியாக ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ 10 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் கடந்தது. 94.4K ரீ ட்விட் மற்றும் 957.1K லைக்ஸ் வாங்கி உலகம் முழுமையும் வைரலாகி இருந்ததை கண்டு ஆச்சர்யத்தில் திகைத்து போயினார்.