முகப்பு » புகைப்பட செய்தி » ட்ரெண்டிங் » திருமணத்தின் போது முன்னாள் காதலர்களை பழிவாங்க பெண் எடுத்த விநோத முடிவு..!

திருமணத்தின் போது முன்னாள் காதலர்களை பழிவாங்க பெண் எடுத்த விநோத முடிவு..!

மணப்பெண்ணின் அனைத்து முன்னாள் காதலர்கலுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தோற்றம் மற்றும் சாயலைக் கொண்டிருந்தனர் என்பது இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.

  • 16

    திருமணத்தின் போது முன்னாள் காதலர்களை பழிவாங்க பெண் எடுத்த விநோத முடிவு..!

    காதலர்கள் பல்வேறு காரணத்தால் பிரிய நேரிடுகிறது! இதில் சில சமயங்களில் ஒரு தரப்பின் மீது மிகப்பெரிய தவறு இருக்கும், யாராவது ஒருவர் சுயநலமாக ப்ரேக்-அப் செய்துவிடுகிறார்கள். இந்த நிலையில் பிரிந்து சென்ற காதலன் அல்லது காதலியை பழிவாங்க வேண்டும் என்றால் அதற்கு இந்த சீன மணமகளை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்ளலாம். எக்ஸ்சை எப்படிப் பழி வாங்குவது இப்படி விட்டு சென்று விட்டானே என்று பலரும் குழம்புவார்கள். இந்த நிலையில் சீன நாட்டைச் சேர்ந்த ஒரு மணப்பெண் தன்னுடைய முன்னாள் காதலர்களை அசத்தலாகவை பழிவாங்கி இருக்கிறார். அவர் அப்படி என்ன செய்திருக்கிறார் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 26

    திருமணத்தின் போது முன்னாள் காதலர்களை பழிவாங்க பெண் எடுத்த விநோத முடிவு..!

    பொதுவாகவே எக்ஸ்-லவ்வரை பழிவாங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் போது, அவர்கள் முன் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று தான் பலரும் நினைப்பார்கள்! அதை தான் இந்த சீன பெண்ணும் செய்திருக்கிறார், ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக பழி வாங்கி இருக்கிறார்!

    MORE
    GALLERIES

  • 36

    திருமணத்தின் போது முன்னாள் காதலர்களை பழிவாங்க பெண் எடுத்த விநோத முடிவு..!

    இந்த சீன மணப்பெண் தன்னுடைய அனைத்து முன்னாள் காதலர்களையும் தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அவர்கள் எல்லாரையும் ஒரே வட்டமேசையில், அருகருகில் அமர வைத்திருக்கிறார். தன்னுடைய முன்னாள் காதலர்கள், தங்கள் வாழ்வில் எதை மிஸ் செய்கிறார்கள் என்பதை பறைசாற்றும் விதமாக அசத்தலாக திருமணத்தை நடத்தி இருக்கிறார். நியூயார்க் டைம்ஸில் வெளியான இந்த செய்தி மற்றும் வீடியோ, இன்ஸ்டண்ட் ஆக சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 46

    திருமணத்தின் போது முன்னாள் காதலர்களை பழிவாங்க பெண் எடுத்த விநோத முடிவு..!

    ஒரு கட்டத்தில், ஒரே வட்ட மேசையில் அருகருகில் அமர்ந்திருந்த முன்னாள் காதலர்கள் அனைவருமே வைன் பாட்டிலை ஒருவருக்கொருவர் பாஸ் செய்துகொள்வதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இந்த திருமணம் ஜனவரி 8 ஆம் தேதி நடந்தது. இதில் மிகவும் வேடிக்கையான ஆனால் ஸ்மார்ட்டான விஷயம் என்னவென்றால், அந்த மணப்பெண் முன்னாள் காதலர்களை அமர வைத்த அந்த டேபிளுக்கு முன்னாள் காதலர்களின் மேசை, table of ex-boyfriends என்று பெயரிட்டு இருக்கிறார் .

    MORE
    GALLERIES

  • 56

    திருமணத்தின் போது முன்னாள் காதலர்களை பழிவாங்க பெண் எடுத்த விநோத முடிவு..!

    மகிழ்ச்சியான மணப்பெண்ணைப் பார்த்த முன்னாள் காதலர்களில் பலரும் இந்த திருமண வைபவத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவர்களில் சிலர் வைனில் மூழ்கி விட்டனர், ஒருசிலர் அசவுகரியமான நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டு தலையை கவிழ்ந்து கொண்டிருந்தனர். இவர்களால் மகிழ்ச்சியாக இருக்கும் மணப்பெண்ணை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது மட்டுமல்லாமல், ரிசப்ஷனில் அனைத்து விருந்தினர்கள் மத்தியிலும் ஹைலைட்டாக மாறி இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 66

    திருமணத்தின் போது முன்னாள் காதலர்களை பழிவாங்க பெண் எடுத்த விநோத முடிவு..!

    மணப்பெண்ணின் அனைத்து முன்னாள் காதலர்கலுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தோற்றம் மற்றும் சாயலைக் கொண்டிருந்தனர் என்பது இதில் குறிப்பிடத்தக்க விஷயம். இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர் ஒருவர் ‘எவ்வாறு மணப்பெண்ணால் ஒரே மாதிரி தோற்றம் கொண்டிருக்கும் நபர்களைத் தேர்வு செய்ய முடிந்தது’ என்பது என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டும் இல்லாமல் மற்றொரு நபர், மனப்பெண்ணை திருமணம் செய்திருக்கும் நபரும் அதே போல தோற்ற ஒற்றுமை கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மணப்பெண் தான் முன்னாள் காதலர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் என்பது ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும், அவர்களும் தைரியமாக திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் அதிர்ச்சியாக இருக்கிறது என்று பரவலாக பேசப்பட்டது.

    MORE
    GALLERIES