முகப்பு » புகைப்பட செய்தி » ட்ரெண்டிங் » கொளுத்தும் கோடை வெயில்... மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்

கொளுத்தும் கோடை வெயில்... மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்

கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் இந்தியா முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வங்காளத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அதிக அளவு வெப்பம் நிலவி வருகிறது. தெற்கு வங்காளத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் அடுத்து வரும் சில நாட்களுக்கு வெப்ப அலைகளுக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 • 15

  கொளுத்தும் கோடை வெயில்... மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்

  கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் இந்தியா முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வங்காளத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அதிக அளவு வெப்பம் நிலவி வருகிறது. தெற்கு வங்காளத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்து வரும் சில நாட்களுக்கு வெப்ப அலைகளுக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத மக்கள் என்னென்னவோ செய்து வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். அதில் மிகவும் வித்தியாசமான ஒரு தீர்வாக வெப்பத்திலிருந்து தப்பிக்க, யை வேண்டி ஆண் தவளைக்கும் பெண் தவளைக்கும் திருமணம் செய்து வைத்த விசித்திர சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது..

  MORE
  GALLERIES

 • 25

  கொளுத்தும் கோடை வெயில்... மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்

  பாரம்பரிய முறைப்படி எவ்வாறு மனிதர்களுக்கு திருமணம் நடக்குமோ, அது போலவே மேளதாளங்களுடன், பெண்களின் குலவை சத்தம் முழங்க திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அசாம், வங்காளம், ஒடிசா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் இது போன்ற பாரம்பரிய முறை திருமணங்கள் இப்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கோடை காலங்களில் வெப்பம் அதிகரிப்பது வழக்கமான விஷயம் தான் என்றாலுமே, அந்த நேரங்களில் மழை பொழிந்தால் வெப்பத்தின் தாக்கத்தை அது சற்று தணிக்க உதவும்.

  MORE
  GALLERIES

 • 35

  கொளுத்தும் கோடை வெயில்... மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்

  ஆனாலும் கூட கோடை காலங்களில் மழை எப்போது வரும் என்று சரியாக கணிக்க இயலாது. மேலும் கடந்த ஒரு மாதமாக நீர்நிலைகள் அனைத்தும் வற்றி போய் விவசாயத்திற்கு நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள விவசாயிகள் கவலை கொண்டுள்ளனர். வழக்கமாக இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போது அங்குள்ள மக்கள் பாரம்பரிய முறையில் கடவுளை மகிழ்வித்து மழை வேண்டி பிரார்த்தனை செய்வார்கள். மேலும் பண்டைய காலங்களிலும் மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  கொளுத்தும் கோடை வெயில்... மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்

  நாடியாவில் உள்ள சாந்தி பூரிப்பூர் பஞ்சாயத்தில் அமைந்திருக்கும் சர்தார் பாரா என்ற பகுதியில் தான் இந்த திருமணம் நடந்துள்ளது. பாரம்பரிய இந்து முறைப்படி அனைத்துவித சடங்குகளுடனும் ஆண் தவளைக்கும் பெண் தவளைக்கும் ஊர் முழுதும் கூடி திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதைப் பற்றி பேசிய அங்கு வசிக்கும் பழங்குடி ஒருவர் கூறுகையில், அந்த கிராமத்தில் இந்த பழக்க வழக்கமானது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருமண சடங்குகளின் போதும் மந்திரங்கள் ஓதப்பட்டு அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை வேண்டி யாகம் வளர்க்கப்பட்டது. இந்த சடங்குகளின் மூலம் வருண பகவானை மகிழ்வித்து மழை பொழிவை பெற முடியும் என்பது அங்கு வசிக்கும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

  MORE
  GALLERIES

 • 55

  கொளுத்தும் கோடை வெயில்... மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்

  அங்குள்ள உள்ளூர் காளி கோவிலில் இந்த திருமணம் வெகு விமரிசையாக காளி தேவியின் முன்பு நடத்தி வைக்கப்பட்டது.அங்குள்ள உள்ளூர் வாசிகளின் நம்பிக்கை படி, தவளைகள் கருவுறுதலின் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகின்றன. ஏனெனில் உலகம் தோன்றிய முதலே தவளைகள் உலகில் வாழ்ந்து வருகின்றன. அவை நீரில் முட்டையிட்டு பிறகு முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்து நிலத்திற்கு வந்து தங்களது வாழ்க்கையை வாழ்கின்றன. அது மட்டுமல்லாமல் நம் நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் கவலைகளின் சிலைகள் காணப்படுகின்றன. தவளைகளை வழிபட்டதற்கான பல்வேறு சிலைகளும் அடையாளங்களும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES