மனதைக் கவரும் பல வித்தியாசமான ஆப்டிகல் இல்யூஷன் மேக்கப் மூலம், கொலம்பியாவின் பொகோட்டாவில் வசிக்கும் 29 வயதான மேக்கப் ஆர்டிஸ்ட் எஸ்தர் அவுலர் (Esther Aular) சோஷியல் மீடியாக்களில் பிரபலமாகி உள்ளார். வெனிசுலாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த திறமையான மேக்கப் ஆர்டிஸ்ட் எஸ்தர், நம்பமுடியாத ஆப்டிகல் இல்யூஷன் தோற்றத்துடன் வைரலாக மாறியுள்ளார்.
டிக்டாக், இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் இவர் ஷேர் செய்து உள்ள சில ஆப்டிகல் இல்யூஷன் மேக்கப் போட்டோக்களில் உள்ள ஒரு சில மேக்கப்களை உருவாக்க 12 மணி நேரம் வரை பிடித்ததாக கூறி இருக்கிறார் எஸ்தர். இவர் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து உள்ள போட்டோக்களில் சிங்கம், கோழி உள்ளிட்ட விலங்குகள் முதல் ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மற்றும் Lord Of The Rings-ல் வரும் கோல்லம் கேரக்டர் என பெரியது முதல் சின்ன சின்ன கேரக்டர்கள் வரை இருக்கிறது. மேலும் ஒரே முகத்தில் பல கண்கள் இருப்பது, முகத்தில் பல கண்கள், வாய், மூக்கு இருப்பது உள்ளிட்ட பல விசித்திரமான ஆப்டிகல் இல்யூஷன் சார்ந்த மேக்கப்பையும் போட்டு அசத்தி நெட்டிசன்களை மத்தியில் மிக பிரபலமாக இருந்து வருகிறார்.
தனது மேக்கப் பற்றி பேசி உள்ள எஸ்தர், எனது மேக்கப் டைப் சர்ரியலிசம் மற்றும் ஆப்டிகல் இல்யூஷன் உள்ளிட்டவை ஆகும். நான் முயற்சித்து பார்க்கும் பெரும்பாலான லுக்ஸ்களை முழுவதுமாக மேக்கப் போட்டு முடிக்க 4 முதல் 6 மணிநேரம் ஆகும். ஆனால் ஒரு சில நேரங்களில் அது 8 முதல் 12 மணி நேரமாக நீளும். ஆனால் இது எனது கலை. இதன் மூலம் எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நான் வாழ்கிறேன். எனவே வித்தியாசமான மேக்கப் யோசனைகளை உருவாக்குவது எனக்கு எளிதானதே என்று கூறி உள்ளார்.