2022ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் அமெரிக்காவின் 28வயதான ஆர்’போனி கேப்ரியல் வெற்றி பெற்றுள்ளார். 71-வது முறையாக,ஏற்பாடு செய்யப்பட்ட பிரபஞ்ச அழகிப்போட்டி நியூஆர்லியன்ஸ் நகரில் நடந்தது. 80-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பிரபஞ்ச அழகி கிரீடத்திற்காக போட்டியிட்டனர். அமெரிக்கா, வெனிசுலா, டொமினிக் குடியரசு நாடுகளை சேர்ந்த அழகிகள் முதல் மூன்று இடத்திற்கு முன்னேறினர். இறுதியில் அமெரிக்காவை சேர்ந்த 28 வயதான ஆர்’போனி கேப்ரியல் பிரபஞ்ச அழகி பட்டத்தை தட்டிச் சென்றார். முந்தைய பிரபஞ்ச அழகியான இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் சந்து 45 கோடி ரூபாய் மதிப்பிலான கிரீடத்தை புதிய பிரபஞ்ச அழகிக்கு சூட்டி வாழ்த்தினார். பிலிபினோ அமெரிக்கர்கள் வம்சாவளியைச் சேர்ந்த ஆர்’போனி கேப்ரியல் மாடல் அழகி, ஆடை வடிவமைப்பாளர், தையல் பயிற்றுவிப்பாளராக இருக்கிறார். அதுமட்டுமின்றி தனது பணியில் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்தியா சார்பில் பங்கேற்ற திவிதா ராய்(Divita Rai) முதல் 16 இடங்களுக்குள் முன்னேறியது குறிப்பிடத்தக்கது. ஆர்’போனி கேப்ரியல் ஆர்’போனி கேப்ரியல் ஆர்’போனி கேப்ரியல்