நாய்களுக்கு அடுத்த படியாக பூனைகள் அதிகம் காணப்படுகின்றன. சில மர்மமான ஆளுமைகள் மற்றும் நல்ல அழகான தோற்றம் பூனைகளை செல்ல பிராணிகள் பட்டியலில் வைத்து உள்ளது. பூனைகளை ஒரு சிலரே ஆசையாக வீட்டில் வாளர்ப்பார்கள். பலர் அவற்றின் சில குணநலன்களை காரணம் காட்டி வளர்ப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.குறிப்பாக பூனைகளை விரும்பாதோர் அல்லது வளர்க்க விரும்பாதோர், பூனைகள் கணக்கிடக்கூடியவை மற்றும் மிகவும் சுயநலம் கொண்டவை என்று பல காரணங்களை கூறுவார்கள். ஆனால் எகிப்திய கலாச்சாரத்தில் பூனைகள் நன்கு மதிக்கப்படுகின்றன. பூனைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்படாத பல சுவாரஸ்ய மற்றும் வேடிக்கையான உண்மைகள் உள்ளன.
விண்வெளிக்கு சென்ற முதல் பூனை..
விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட குரங்குகள் மற்றும் நாய்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒரு பூனை கூட விண்வெளிக்கு செல்லுமளவிற்குதைரியமாக இருந்தது உங்களுக்குத் தெரியுமா..? 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி 'ஆஸ்ட்ரோகேட்' என்றும் அழைக்கப்படும் ஃபெலிசெட் தான் விண்வெளிக்குச் சென்ற முதல் மற்றும் ஒரே பூனை.
சிறிய நகரத்தின் மேயராக 20 ஆண்டுகள் இருந்த பூனை..
என்னது, பூனை மேயராக இருந்ததா என்று நீங்கள் வியப்பது சரி தான். ஸ்டப்ஸ் என்று அழைக்கப்பட்ட ஆரஞ்சு கலர் டேபி பூனை, அலாஸ்காவில் உள்ள டால்கீட்னா என்ற சிறிய நகரத்தின் மேயராக 20 ஆண்டுகள் இருந்தது. உள்ளூர் மக்களாலும் சுற்றுலாப் பயணிகளாலும் அதிகம் விரும்பப்பட்டதால் அந்த பூனை போட்டியின்றி பல தேர்தல்களை சந்தித்தது. மேயர் பூனை அல்லவா.! அதனால் அது சட்டமியற்றும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை.