உலகமே விநோதம் தான். இயற்கையின் விநோதங்கள் நாளுக்கொன்றாய் வெளிப்பட்டு வரும் நிலையில் மனித சமூகமும் எத்தனையோ விநோதங்களை கடந்தும் வந்திருக்கிறது. பல தலைமுறைகளுக்கு கடத்தியும் வந்திருக்கிறது. அந்த வகையில் உலகில் இருக்கும் 7 விநோத நகரங்களை பார்க்கலாம். உலகமே விநோதம்தான். இயற்கையின் விநோதங்கள் நாளுக்கொன்றாய் வெளிப்பட்டு வரும் நிலையில் மனித சமூகமும் எத்தனையோ விநோதங்களை கடந்தும் வந்திருக்கிறது. பல தலைமுறைகளுக்கு கடத்தியும் வந்திருக்கிறது. அந்த வகையில் உலகில் இருக்கும் 7 விநோத நகரங்களை பார்க்கலாம்.
1. தரைகீழ் நகரம், ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் உள்ள தரைகீழ் நகரம் (Underground Town) வழக்கமாக தரைக்கு மேல்தான் நகரங்கள் நிர்மானிக்கப்படும். ஆஸ்திரேலியாவில் ஒரு நகரம் தரைக்கு கீழ் நிர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஏன் இந்த விநோதம் என்கிறீர்களா. கூபர் பெடி என்கிற இந்த இடம்தான் உலகின் ஓபல் ரத்தினக் கற்களின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்தப்பகுதியில் 70 விழுக்காடு நிலப்பரப்பு சுரங்கத்திற்காக தோண்டப்பட்டுள்ளது. அதை ஏன் வீணாக்குவானேன் என தரைக்கு கீழேயே நகரை நிர்மாணித்திருக்கிறார்கள்.
2. பொம்மை நகரம்-ஜப்பான்: ஜப்பானில் உள்ள பொம்மை நகரம் என்றாலே மக்கள் நெருக்கமும், வாகன நெரிசலும்தான். ஆனால் ஒரு நகரத்தில் ஆட்களை விட பொம்மைகள் தான் எங்கும் நிறைந்திருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? ஜப்பானில் உள்ள நகோரா என்ற நகரத்தில் வாழ்வது வெறும் 35 மனிதர்கள் தான். ஆனால் திரும்பிய பக்கமெல்லாம் பொம்மைகள் தான் இருக்கின்றன. பாலைவன நகரமான இங்கு மக்கள் தொகை குறைவதை சமன் செய்வதற்காக அயோனோ சுகுமி என்ற சிற்பக் கலைஞர் உருவாக்கிய பொம்மைகள் தான் இவை.
3. குளோனிங் நகரம்-சீனாகுளோனிங் நகரம்-சீனா விலங்குகள், மனிதர்கள் உள்ளிட்ட உயிருள்ளவைகளைத் தானே குளோனிங் செய்ய முடியும் என்று நினைத்திருந்தோம். சீனாவில் ஒரு நகரத்தையே குளோனிங் செய்து அசத்தியிருக்கிறார்கள். உலகில் அனைத்திற்கும் மாற்று கண்டுபிடிக்கும் சீனர்கள், நகர நிர்மானத்தைக் கூட விட்டுவைக்கவில்லை. குவாங்டாங் மாகாணத்தில் இருக்கும் ஹோய்சோவ் என்ற நகரம் அப்படியே அச்சுப் பிசகாமல் ஆஸ்திரியாவின் ஹால்ஸ்டாட் நகரைப் போலவே உருவாக்கப்பட்டுள்ளது.
4. கூட்டுக்குடும்ப நகரம் - இத்தாலி: இத்தாலியில் உள்ள கூட்டுக்குடும்ப நகரம் பெயரே வித்தியாசமாக இருக்கிறதா? இந்த நகரமும் ரொம்பவே வித்தியாசமானது தான். ஆம் டாமன்ஹூர் சங்கம் என்ற பெயரில் 20 முதல் 30 பேர் ஒன்றாக சேர்ந்து குழுவாக வாழ்கிறார்கள். எதிர்காலத்திற்கான மனித குலத்தின் ஆய்வுக் கூடம் என்றே இந்த நகரம் அழைக்கப்படுகிறது. வெறும் 600 பேர் மட்டுமே வாழும் இந்த நகரம் வடக்கு இத்தாலியில் இருக்கிறது. இந்த நகரத்திற்கென தனி கரன்சியே இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
5. குகை நகரம்: குகை நகரம்பழங்கால மனிதர்கள் குகைளில் வாழ்ந்தார்கள் நாகரீகம் வளர்ந்த பிறகு மனிதன் நகரங்களில் வாழ்ந்து வருகிறான். ஆனால் இன்றும் குகைகள் மட்டுமே உள்ள நகரம் ஒன்று தெற்கு துனிசியாவில் இருக்கிறது. பாறையால் சூழப்பட்டுள்ள இந்த நகரம் முழுவதுமே குகைகள் அமைக்கப்பட்டு அதில் தான் மக்கள் வசிக்கிறார்கள்.
6. அபார்ட்மென்ட் நகரம் – அலாஸ்காஒரு நகரத்தில் பல அபார்ட்மெண்ட்கள் இருக்கும். ஆனால் ஒரு அபார்ட்மெண்டே ஒரு நகரம் போல் செயல்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான். அலாஸ்காவில் தான் இந்த விநோத நகரம் இருக்கிறது. ராணுவ பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட ஒரு 14 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் 222 குடும்பங்கள் வசிக்கிறார்கள். அந்த அபார்ட்மெண்டே ஒரு நகரம் போல் செயல்படுகிறது. தனி காவல்நிலையம், கேஸ் நிலையம், சர்ச் என அனைத்துமே உள்ளன. அபார்ட்மெண்ட் நகருக்குள் செல்ல ஒரு சுரங்கப்பாதைதான் இருக்கிறது.
7. விடியா நகரம் – நார்வே உலகின் மிக நீண்ட இரவைக் கொண்ட மக்கள் வாழும் நகரம் எது தெரியுமா? நார்வேயில் உள்ள லாங்இயர் பெய்ன்தான். இங்கு ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி மறையும் சூரியன் அடுத்து எப்போது உதிக்கும் தெரியுமா? அடுத்த ஆண்டு மார்ச் மாதம்தான். கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு இங்கு சூரியனையே பார்க்க முடியாதாம். நான்கு மாதங்கள் கழித்து வரும் சூரிய உதயத்தை ஒரு வார திருவிழாவாக கொண்டாடுவார்களாம் இந்த நகர மக்கள்.