இவரது தோட்டத்தில் உயிரிழந்த பாம்பு வயிற்றில் சுமார் 50 குட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கிராமத்தினருக்கு தகவல் அளித்துள்ளார். பெரும்பாலும் பாம்புகள் முட்டையிட்டு தான் குட்டிகள் வெளியே வரும் ஆனால் பாம்பு குட்டிகள் உடன் இருப்பதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். மேலும் தன்னுடைய குட்டிகளை அந்த பாம்பே விழுங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.