முகப்பு » புகைப்பட செய்தி » ட்ரெண்டிங் » உலகிலேயே மிக நீளமாக நகம் வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த 5 நபர்கள் இதோ.! 

உலகிலேயே மிக நீளமாக நகம் வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த 5 நபர்கள் இதோ.! 

Longest Fingernails | நகங்களை வளர்க்கும் வினோதமான பொழுதுபோக்கு மூலமாக கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்த ஐந்து பேர் பற்றி இங்கே அறிந்து கொள்வோம்.

 • 17

  உலகிலேயே மிக நீளமாக நகம் வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த 5 நபர்கள் இதோ.! 

  பூமியில் பிறந்ததற்கு அடையாளமாக எதையாவது சாதிக்க வேண்டும் என எண்ணம் அனைவரிடத்திலும் உண்டு. சிலர் உலக அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் சாதனை படைக்க வேண்டும் என நினைப்பார்கள். உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக மக்கள் மெய் சிலிர்க்க வைக்கும் சாகங்கள் முதல் விநோதமான செயல்கள் வரை பலவற்றை முயற்சித்து பார்க்கின்றனர். அதில் நீளமாக நகம் வளர்ப்பது என்பது விசித்திரமான மாற்றும் வேடிக்கையான சாதனையாக பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 27

  உலகிலேயே மிக நீளமாக நகம் வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த 5 நபர்கள் இதோ.! 

  நகங்களை வளர்க்கும் வினோதமான பொழுதுபோக்கு மூலமாக கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்த ஐந்து பேர் பற்றி அறிந்து கொள்வோம். நீண்ட நகங்களால் அவர்கள் பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்தாலும், தங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் காரணமாக அதனை மிகப்பெரிய கெளரவமாக கருதுகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 37

  உலகிலேயே மிக நீளமாக நகம் வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த 5 நபர்கள் இதோ.! 

  டயானா ஆம்ஸ்ட்ராங்: அமெரிக்காவின் மினசோட்டா நகரில் வசிக்கும் டயானா ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் நீண்ட நகங்களுக்கான கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இவர் சுமார் 24 ஆண்டுகளாக தனது இரண்டு கைகளிலும் நகங்களை வெட்டாமல் 1,306.58 சென்டி மீட்டர் அளவிற்கு வளர்த்துள்ளார். அதாவது 42 அடி, 10 அங்குலம் அளவிற்கு நகங்களை வளர்த்ததற்காக டயானா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 1997 ஆம் ஆண்டு தனது 16 வயது மகளை இழந்த டயானா, கடைசியாக அவள் தனக்கு வைத்துவிட்ட நெயில் பாலிஷை அழிக்க கூடாது என்பதற்காக நகம் வெட்டுவதை நிறுத்தியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 47

  உலகிலேயே மிக நீளமாக நகம் வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த 5 நபர்கள் இதோ.! 

  ஸ்ரீதர் சில்லால்: இந்தியாவைச் சேர்ந்த 85 வயதான ஸ்ரீதர் சில்லார் என்பவரும் நீளமாக நகம் வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் தனது இடது கையில் மட்டும் 29 அடி, 10 அங்குலம் நீளத்திற்கு நகங்களை வளர்த்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 1952ம் ஆண்டு முதல் சுமார் 66 ஆண்டுகளாக நகத்தினை வெட்டாமல் வளர்த்து வந்த ஸ்ரீதர் அதனை அருட்காட்சியகத்திற்கு அளித்துள்ளார். 2018ம் ஆண்டு அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது தனது நகங்களை அந்த தொலைக்காட்சியில் அரியப் பொருட்களை சேமித்து வைக்கும் அருங்காட்சியகத்திற்கு வழங்கிவிட்டார்.

  MORE
  GALLERIES

 • 57

  உலகிலேயே மிக நீளமாக நகம் வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த 5 நபர்கள் இதோ.! 

  லீ ரெட்மாண்ட்: அமெரிக்காவைச் சேர்ந்த லீ ரெட்மாண்ட் என்ற பெண்மணி 2008ம் ஆண்டு முதல் நகங்களை வெட்டாமல் 28 அடி, 4.5 அங்குலத்திற்கு வளர்த்து சாதனை படைத்துள்ளார். நகம் வளர்க்க வேண்டும் என்ற ஆசையுடன் தினமும் அரை மணி நேரம் ஆலிவ் ஆயிலில் நகங்களை நனைத்து பார்த்து, பார்த்து பராமரித்து வந்துள்ளார். ஆனால் 2020ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கிய லீ ரெட்மாண்ட்டின் கைகளில் அடிபட்டதால் அவரது நகங்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 67

  உலகிலேயே மிக நீளமாக நகம் வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த 5 நபர்கள் இதோ.! 

  அயன்னா வில்லியம்ஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸில் வசித்து வரும் அயன்னா வில்லியம்ஸ் 24 அடி 0.7 அங்குலம் நீளத்திற்கு இரண்டு கைகளிலும் நகங்களை வளர்த்ததற்காக 2021ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இருப்பினும், வாகனம் ஓட்டும்போதும், ஆடை அணியும்போதும், கழிவறையை பயன்படுத்துவதிலும் பிரச்சனைகளை எதிர்கொண்டதால் அதனை வெட்ட முடிவெடுத்தார்.

  MORE
  GALLERIES

 • 77

  உலகிலேயே மிக நீளமாக நகம் வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த 5 நபர்கள் இதோ.! 

  மெல்வின் பூதே: மெல்வின் பூத்தே பொழுபோக்கிற்காக நகம் வளர்க்க ஆரம்பித்த இவர், 2009ம் ஆண்டு தனது இரண்டு கைகளிலும் 32 அடி 3 அங்குலம் நீளத்திற்கு நகங்களை வளர்த்ததால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். ஆனால் உலக சாதனை படைத்த 7 மாதங்களுக்குப் பிறகு மெல்வின் பூதே உயிரிழந்தது பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியது.

  MORE
  GALLERIES