

இந்தியாவில் மட்டுமல்ல உலககெங்கிலும் இந்து கோவில்கள் பிரம்மாண்டமாகவும், அற்புத கட்டிடகலை உடை கட்டப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்ட இந்த கோவில்களில் எந்தவித இயந்திர ஏற்பாடு இல்லாமல் கட்டப்பட்டன.


அக்ஷர்தாம் கோயில், டெல்லி : சுவாமநாரயண் கோயில் 100 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 10,000 ஆண்டுகள் பழமையான கலாச்சராம், ஆன்மீகத்தை கட்டிடக்லை சித்தரிக்கிறது. இந்த கோயில் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.


அங்கோர் வாட் கோயில், கம்போடியா: கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோயில் வளாகம் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இந்து கோவிலாகும். சிம்ரிப் நகரில் மீகாங் ஆற்றின் கரையில் கட்டப்பட்ட இந்த கோயில், கெமர் கட்டிடக்கலையின் பழமையை காட்டுகிறது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.


அண்ணாமலையர் கோயில், திருவண்ணாமலை : அண்ணாமலையர் கோயில் 1,01,171 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோவில் இந்தியாவின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றாகும்.


பெலூர் மடம், மேற்கு வங்கம்: ஹூக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ள பேலூர் மடம் சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்டது. இது நாற்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.


பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சை : 1000 ஆண்டு பழமையான தஞ்சை பெரியக்கோவில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கு கட்டப்பட்ட மிகப்பெரிய இந்து கோவில். கிரானைட் கல்லினால் கட்டப்பட்ட இந்த கோவில் யுனெஸ்கோவால் உலக பாரம்பாரியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜம்புகேஷ்வர் கோவில், திருச்சி : திருச்சி திருவானைக்காவல் கோவில் மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோவில். ஆறாம் நூற்றாண்டில் இந்த திருத்தலம் கட்டப்பட்டுள்ளது.


ஏகாம்பரேஸ்வர் கோவில், காஞ்சிபுரம் : காஞ்சி ஏகாம்பரேஸ்வர் கோவில் பிரதிபெற்ற சிவன் கோவில். இந்த கோவில் 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.


நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி : திருநெல்வேலியில் அமைந்துள்ள இந்த கோவில் சுமார் 71,00 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தியாவின் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.


தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம் : சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படும் நடராஜா கோயில் சிவபெருமானின் முக்கிய கோயில்களில் ஒன்றாகும். 1,06,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது, நடராஜராக சிவனின் தனித்துவமான வடிவம் கோயிலின் முதன்மை தெய்வம் மற்றும் அவர் கோயிலின் ஒவ்வொரு கல் மற்றும் தூணிலும் காணப்படுகிறார்.