

ஃபோர்டு நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 4ஆயிரம் ஈகோ ஸ்போர்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. எஸ்.யூ.வி ரகங்களில் ஃபோர்டின் மிகச்சிறந்த விற்பனைச் சாதனையைச் செய்து வருகிறது ஈகோ ஸ்போர்ட். விலை- 7,82,000 முதல் 11,89,000 ரூபாய் வரையில். (Photo: Manav Sinha/News18.com)


DOHC என்ஜின், 1600 rpm-க்கு 240 Nm டார்க் வெளியீடு, 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டுள்ளது இந்த மஹிந்திரா TUV300. தொடக்க விலை- 10.16 லட்சம் ரூபாய். (Image: Mahindra)


ரெனால்ட் நிறுவனத்தில் முன்னணி SUV ஆக டஸ்டர் உள்ளது. 12.47 லட்சம் ரூபாய்க்கு விற்பனை விலை நிர்ணயம் உள்ளது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்சிஷன் உடன் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. (Photo: Renault India)


ஹோண்டா BRV விலை 12.53 லட்சம் ரூபாய். இக்காரின் திறன் 1497cc ஆக உள்ளது. ABS மற்றும் EBD ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. (Photo: Siddharth Safaya/News18.com)


அப்டேட் ஆன தொழில்நுட்பங்களுடன் ஹுண்டாய் நிறுவனத்தின் அறிமுகம் தான் க்ரெட்டா. 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ரகங்கள் உள்ளன. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்சிஷன் உள்ள க்ரெட்டாவின் தொடக்க விலை 13.07 லட்சம் ரூபாய் ஆகும். (Photo: Siddharth Safaya/News18.com)