திருவாரூர் நகரத்திற்குட்பட்ட வாசன் நகர் பகுதியில் ஸ்ரீ ஸ்கந்த சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் எட்டாம் ஆண்டு குடமுழுக்கு விழா தினத்தை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட பெண்கள் மாலை அணிந்து விரதமிருந்து செவ்வாடை அணிந்து பால் குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.