மேலும் ஆரணி சரக வனத்துறையினர் கண்ணாடி மாளிகையை சுற்றி வேலி அமைத்து வனத்துறைக்கு சொந்தமான இடமான அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். மேலும் ஆரணியின் புராதன சின்னமாக விளங்கும் பூசிமலைக்குப்பம் கண்ணாடி மாளிகையை சுற்றுலாத்தலமாக மாற்றி அமைத்து பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆரணியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் 11 கோடி ரூபாய் நிதி ஓதுக்கி பணி கேட்பாரற்று உள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணியை விரைந்து முடித்து கண்ணாடி மாளிகையை சுற்றுலாத்தலமாக மாற்றி அமைக்க நடவடிக்கை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், அதேபோல் படவேடு பகுதியில் உள்ள கல்வெட்டுகள் புராதன சின்னங்கள் அனைத்தையும் பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.