இதைத் தொடர்ந்து வருகிற டிசம்பர் 3ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும். இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நிறைவு நாளான 10வது நாள் டிசம்பர் 6 ம் தேதி அதிகாலை திருக்கோயில் கருவறையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும்.