ஐஸ்வர்யா அவர்களின் திரைக்கதை மற்றும் இயக்கத்தின் சார்பில் வெளிவர உள்ள லால் சலாம் திரைப்படம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2/ 5
இதற்கு உண்டான நடிகர் நடிகைகள் தேர்வு திருவண்ணாமலையில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்று படப்பிடிப்பு தளங்கள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
3/ 5
அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதிகளில் சாமி தரிசனம் முடித்த அவருக்கு அண்ணாமலையார் கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
4/ 5
இதையடுத்து கோவில் இருந்தவர்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகா்நத் நன்றி தெரிவித்து கொண்டார்.
5/ 5
தொடர்ந்து அவருடன் பக்தர்கள் புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.