திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: 4ம் நாளில் நாக வாகனத்தில் வலம் வந்த சந்திரசேகரர்..!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் நான்காம் நாளில், விநாயகர் சிறிய சிம்ம வாகனத்திலும் சந்திரசேகரர் தங்க நாக வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமான அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்றது வருகிறது.
2/ 6
இதில் நான்காம் நாளான இன்று காலை திருக்கோயிலில் விநாயகர் மற்றும் சந்திரசேகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
3/ 6
அதனைத் தொடர்ந்து விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு அதேபோல் சந்திரசேகருக்கு பட்டாடை உடுத்தி கற்கள் பதித்த ஆபரணங்கள் சூட்டி வண்ண வண்ண மலர்களை கொண்டு மலர் மாலைகள் சுடப்பட்டு பஞ்ச கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.
4/ 6
இதனைத் தொடர்ந்து வினாயகரும் சந்திரசேகரும் கோவிலில் வலம் வந்து ராஜகோபுரம் அருகே உள்ள 16 கால் மண்டபத்தில் காட்சி அளித்தனர்.
5/ 6
இதன் பிறகு விநாயகருக்கு சிறிய சிம்ம வாகனத்திலும் சந்திரசேகரர் தங்க நாக வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
6/ 6
இதில் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்களுக்கு விநாயகர் மற்றும் சந்திரசேகரர் அருள் பாலித்தனர்.