மாவட்ட பல்லடத்தை சேர்ந்த கோகுல் நாத்தின் குடும்பத்தினர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து சேவையில் ஈடுபட்டுள்ளனர். டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
2/ 6
இதனால், மாற்றி யோசித்து பேருந்திற்கான செலவை கட்டுப்படுத்தும் வகையில் சி.என்.ஜி. (இயற்கை எரிவாயு)-ல் இயங்க கூடிய பேருந்தை தனியார் பேருந்து நிறுவனத்தின் உதவியோடு தயாரித்திருக்கிறார்.
3/ 6
அதன்படி, அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் பேசி, டீசல் டேங்கிற்கு பதிலாக 90 லிட்டர் அளவிலான (சிஎன்ஜி) இயற்கை எரிவாயுவை நிரப்ப நான்கு கொள்கலன்களை அமைத்துள்ளார்.
4/ 6
எரிவாயுவை வேகமாக நிரப்பக்கூடிய வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டேக்கில் 90 கிலோ சிஎன்ஜி. கேஸ் நிரப்பலாம். இது 600 லிட்டர் டீசலுக்கு சமமானது என்று சொல்லப்படுகிறது.
5/ 6
இயற்கை எரிவாயுவும், டீசலும் லிட்டர் அளவிலான விலை வேறுபாடு ரூ.40 அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டி புகையை கக்கே வேண்டியும் இருக்காது, எனவே, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தாது.
6/ 6
சோதனை அடிப்படையில் இயக்கிப் பார்க்கப்பட்ட இந்த பேருந்தானது, வேகம்,இழுவை போன்றவை சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.இந்த பேருந்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.