முகப்பு » புகைப்பட செய்தி » திருப்பத்தூர் » தாறுமாறாக ஓடிய கார்... நொடிப்பொழுதில் பறிபோன 3 மாணவர்கள் உயிர்.. வாணியம்பாடியில் சோகம்..!

தாறுமாறாக ஓடிய கார்... நொடிப்பொழுதில் பறிபோன 3 மாணவர்கள் உயிர்.. வாணியம்பாடியில் சோகம்..!

Thirupathur Accident | வாணியம்பாடி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த 3 பள்ளி மாணவர்கள் மீது அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. செய்தியாளர்: வெங்கடேசன், திருப்பத்தூர்

 • 15

  தாறுமாறாக ஓடிய கார்... நொடிப்பொழுதில் பறிபோன 3 மாணவர்கள் உயிர்.. வாணியம்பாடியில் சோகம்..!

  மாவட்டம் வாணியம்பாடி அருகே கார் மோதியதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  தாறுமாறாக ஓடிய கார்... நொடிப்பொழுதில் பறிபோன 3 மாணவர்கள் உயிர்.. வாணியம்பாடியில் சோகம்..!

  வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு கிராமத்தில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் மீது, அதிவேகமாக வந்த கார் மோதியது.

  MORE
  GALLERIES

 • 35

  தாறுமாறாக ஓடிய கார்... நொடிப்பொழுதில் பறிபோன 3 மாணவர்கள் உயிர்.. வாணியம்பாடியில் சோகம்..!

  இதில் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ரபீக், விஜய், சூர்யா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சர்வீஸ் சாலைக்குள் புகுந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  தாறுமாறாக ஓடிய கார்... நொடிப்பொழுதில் பறிபோன 3 மாணவர்கள் உயிர்.. வாணியம்பாடியில் சோகம்..!

  அப்போது சைக்கிளில் பள்ளி சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது கார் மோதியதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து திரண்ட கிராம மக்கள், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  MORE
  GALLERIES

 • 55

  தாறுமாறாக ஓடிய கார்... நொடிப்பொழுதில் பறிபோன 3 மாணவர்கள் உயிர்.. வாணியம்பாடியில் சோகம்..!

  விரைந்து வந்து மாணவர்களின் உடல்களை மீட்ட போலீசார், உட்றகூராய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பள்ளி சென்ற மாணவர்கள் மீது தாறுமாறாகச் சென்ற கார் மோதியது கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

  MORE
  GALLERIES