பகுதியில் புகழ்பெற்ற ஒன்பது சிவன் கோயில்கள் உள்ளன. இந்த ஒன்பது திருத்தலங்களையும் நவகைலாயம் என்ற அழைப்பர். இந்த கோவில்களில் வழிபட்டால் பக்தர்களுக்கு உடல் நலம் மற்றும் செல்வ பலத்தை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஒன்பது கோவில்களில் நான்கு கோவில்கள் திருநெல்வேலி மாவட்டத்திலும், மற்ற கோவில்கள் மாவட்டத்தில் அமைந்துள்ள.
பாபநாசம் : திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பாபநாசம். இந்த கோவிலில் பாபாவினாசர் மற்றும் கைலாசநாதர் அருள்புரிகின்றனர். இது ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. இங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் பாவங்களை நீக்கும் முக்கிய அருவியாக கருதப்படும் அகஸ்தியர் அருவி உள்ளது. இது சூரிய பகவானுக்குரிய தலமாக போற்றப்படுகிறது.
சேரன்மகாதேவி : திருநெல்வேலில் இருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்திக்கிறது சேரன்மகாதேவி. இந்த சிவாலயம் நவகைலாயங்களில் இரண்டாவதாக சந்திரனுக்குரியத் தலமாகக் கருதப்படுகிறது. இந்த தலத்தின் மூலவர் கைலாசநாதர், அம்மைநாதர் என்றும், அம்மன் ஆவுடைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றார். ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு, திருநெல்வேலி சந்திப்பில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோடகநல்லூர்: திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவிக்கு செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கோடகநல்லூர். இங்கே கைலாசநாதர் மற்றும் சிவகாமியம்மை அருள்புரிகின்றனர். இந்த கோவிலை வழிபடுவது சிதம்பரத்திற்கு அருகில் இருக்கில் இருக்கும் வைத்தீஸ்வரன் திருக்கோயிலை வழிபடுவதற்கு சமம் என கூறப்படுகிறது. இந்த கோவிலுக்கு செல்லவும் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது செவ்வாய்க்கு உரிய தலமாக திகழ்கிறது.
முறப்பநாடு: திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது முறப்பநாடு. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் கைலாசநாதர் இறைவி சிவகாமி அம்மாள் அருள்புரகின்றனர். குருபகவானின் அருள் பெற வழிபட வேண்டிய திருத்தலமாக இது கருதப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டம்: திருநெல்வேலில் இருந்து 30 கி.மீ தொலைவிலும் தூத்துக்குடியில் இருந்து 40கி.மீ. தொலைவிலும் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது ஸ்ரீவைகுண்டம் சிவன் கோவில். முதல் நவதிருப்பதி என்று அழைக்கப்படும் கோவில் இங்குதான் அமைந்துள்ளது. இங்கே கைலாசநாதர்- சிவகாமியம்மை பக்தர்களுக்கு அருள்புரிகின்றனர். இத்திருக்கோயிலை வழிபடுவது காரைக்கால் அருகில் உள்ள திருநள்ளாறு திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது. இது சனி பகவானுக்குரிய தலமாக கருதப்படுகிறது. இங்கே சனி பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன.
தென்திருப்பேரை: தமிழகத்தின் நவ கைலாயங்களுள் ஏழாவது தலமாக போற்றப்படும் தென்திருப்பேரை, திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அழகிய தேவதாசி கோவில் ஒன்று அமைந்துள்ளது. கோவிலின் மூலவர் கைலாசநாதர், அம்பாள் அழகிய பொன்னம்மை.நவக்கிரகங்களில் புதனுடையத் தலமாக இது திகழ்கிறது.
சேந்தன்பூமங்கலம்: தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ தொலைவில் ஆத்தூர் மற்றும் புன்னகாயல் அருகில் அமைந்திருக்கிறது சேந்தன்பூமங்கலம். இங்கே இறைவர்-கைலாசநாதர் அன்னை சிவகாமி அம்மை ஆகியேர் அருள் புரிகின்றனர். இந்தக் தலம் நவகிரகங்களில் சுக்ரனுக்குரிய தலமாக பாவிக்கப்படுகிறது.