ஊட்டி, கொடைக்கானல் பேன்ற மலை சுற்றுலா தளங்களை போல இங்கே யாரும் அவ்வளவு எளிதில் சென்றுவிட முடியாது. இங்கே கட்டுப்பாடு முறைகள் அதிகமாக உள்ளன. பைக்கில் செல்வதற்கு அனுமதி இல்லை. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு பேருந்துகள் மட்டும்தான் தான் மாஞ்சோலை குதிரை வெட்டி ,ஊத்து வரை சென்று வரும்.
பசுமை அழகும் குளிச்சியும் நிறைந்த மணிமுத்தாறு - மாஞ்சோலை பாதையில் உள்ள மரங்கள், தேயிலைத் தோட்டங்களைக் கடந்து செல்வதும் வாழ்நாளில் மறக் முடியாத அனுபத்தை கொடுக்கும். மாஞ்சோலை வெறும் தேயிலைத் தோட்டமோ, சுற்றுலாத் தலமோ மட்டும் அன்றி, இது புலிகள் சரணாலயம் அடங்கிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதை சுற்றுலா பயணிகள் நினைவில் கொள்ள வேண்டும்.