பாபநாசம் அணை : திருநெல்வேலியில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த அழகிய அணை. இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு முக்கிய அணையாகும். திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கான முக்கிய ஆதாரமாக இந்த அணை இருந்து வருகிறது. இந்த அணையை சுற்றுலா பயணிகள் காணத்தவறக் கூடாத இடம்.