இயற்கையின் அற்புதமாக விளங்கும் இந்த அருவிக்கு அருகில் வாகனங்களில் செல்ல போதிய பாதை வசதி இல்லாததால், கரடு முரடான மலைப் பாதையில் சிறிது தூரம் செல்ல வேண்டி இருக்கும். எனவே வாகனங்களில் வருபவர்கள் அருவிக்கு சற்று தொலைவில் இருக்கும் பார்க்கிங்கில் உங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு நீரோடும் ஆற்றை கடந்து நடந்து வந்து இந்த அருவியை அடைய வேண்டி இருக்கும்.
குத்திரபாஞ்சான் அருவியில் இருந்து பாய்ந்துவரும் குளிர்ந்த நீரானது, கன்னிமார்கள் தோப்பு என்ற தடுப்பணைக்கு செல்கிறது. இந்த இடமும் குளித்து மகிழ ஏற்ற அருமையான இடமாகும். இங்கே சுற்றுவட்டார பகுதிகளல் இருந்து மட்டும் அல்லாமல் பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து என்ஜாய் அடைகின்றனர்.