இங்கே தனி வாகனத்தில் சுற்றுலா செல்ல வேண்டும் என்றால், அம்பாசமுத்திரத்தில் இருக்கும் வனத்துறையின் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு ஆதார் உள்ளிட்ட ஐடி கார்டுடன் சென்று, அங்கே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதனை நீங்கள் டூர் செல்வதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னரே செய்து கொள்ளுங்கள்.
அந்த விண்ணப்பத்தில், மாஞ்சோலைக்கு செல்ல இருப்போரின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள், வண்டி எண் போன்ற விவரங்களை நிரப்பிக் கொடுக்க வேண்டும். வனத்துறையினர் அனுமதி கொடுத்த பிறகு, அந்த அனுமதி சீட்டை மூன்று அல்லது நான்கு ஜெராக்ஸ் காபிகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மாஞ்சோலை செல்லும் வழியில் இருக்கும் செக்போஸ்டில் காண்பிக்க வேண்டி இருக்கும்.