முகப்பு » புகைப்பட செய்தி » திருநெல்வேலி » கோடையில் ஜில்லென்று குளித்து மகிழ நெல்லை மாவட்டத்தில் உள்ள தேங்காய் உருளி அருவிக்கு ஒரு ட்ரிப் போகலாம்!

கோடையில் ஜில்லென்று குளித்து மகிழ நெல்லை மாவட்டத்தில் உள்ள தேங்காய் உருளி அருவிக்கு ஒரு ட்ரிப் போகலாம்!

Thengai Uruli Falls | திருநெல்வேலி மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு அருகே இருக்கும் தேங்காய் உருளி அருவி கோடை காலத்தில் குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்வதற்கு ஏற்ற அற்புதமான இடமாகும்.

  • 19

    கோடையில் ஜில்லென்று குளித்து மகிழ நெல்லை மாவட்டத்தில் உள்ள தேங்காய் உருளி அருவிக்கு ஒரு ட்ரிப் போகலாம்!

    மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு புலிகள் காப்பகம் அருகில் உள்ள தலையணைக்கு அருகில் இருக்கிறது தேங்காய் உருளி அருவி. பசுமை நிறைந்த சூழலுக்கு இடையில் உங்கள் மனதை கொள்ளை கொள்ள அழகே உருவாய் கொட்டுகிறது இந்த அழகிய அருவி.

    MORE
    GALLERIES

  • 29

    கோடையில் ஜில்லென்று குளித்து மகிழ நெல்லை மாவட்டத்தில் உள்ள தேங்காய் உருளி அருவிக்கு ஒரு ட்ரிப் போகலாம்!

    இந்த தேங்காய் உருளி அருவியானது வன எல்லைக்கு வெளியே இருப்பதால், வனத்துறையினரின் கட்டுப்பாடுகள் இல்லை. எனவே, இந்த அருவிக்கு செல்வதற்கு அனுமதியோ, கட்டணமோ இல்லை. இதனால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுவது வழக்கம்.

    MORE
    GALLERIES

  • 39

    கோடையில் ஜில்லென்று குளித்து மகிழ நெல்லை மாவட்டத்தில் உள்ள தேங்காய் உருளி அருவிக்கு ஒரு ட்ரிப் போகலாம்!

    களக்காடு பேருந்து நிலையத்தில் இருந்து தலையணை செல்லும் சாலையில் சென்று, தலையணைக்கு கீழே வலது புறம் திரும்பும் சாலையில் சென்றால் சிவபுரம் வழியாக இந்த தேங்காய் உருளி அருவியை அடையலாம்.

    MORE
    GALLERIES

  • 49

    கோடையில் ஜில்லென்று குளித்து மகிழ நெல்லை மாவட்டத்தில் உள்ள தேங்காய் உருளி அருவிக்கு ஒரு ட்ரிப் போகலாம்!

    அவ்வாறு செல்லும்போது, கார், டூவீலர் போன்ற வாகனங்களில் சிவபுரம் வரை மட்டுமே செல்ல முடியும், பின்னர், அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று இந்த அருவையை சென்றடையலாம்.

    MORE
    GALLERIES

  • 59

    கோடையில் ஜில்லென்று குளித்து மகிழ நெல்லை மாவட்டத்தில் உள்ள தேங்காய் உருளி அருவிக்கு ஒரு ட்ரிப் போகலாம்!

    இது மற்றும் அன்றி, பச்சையாறு அணையில் இருந்தும் இந்த அருவிக்கு வரமுடியும். அவ்வாறு வருபவர்கள் பச்சையாறு அணையில் இருந்து ஊட்டு கால்வாய் கரை வழியாக சென்று இந்த தேங்காய் உருளி அருவிக்கு வரமுடியும். இந்த இரண்டு பாதைகள் வழியாகவும் தனி வாகனங்களில் இங்கே வரலாம்.

    MORE
    GALLERIES

  • 69

    கோடையில் ஜில்லென்று குளித்து மகிழ நெல்லை மாவட்டத்தில் உள்ள தேங்காய் உருளி அருவிக்கு ஒரு ட்ரிப் போகலாம்!

    இந்த அருவி தண்ணீரில் மூலிகைகள் கலந்திருப்பதால், இதில் குளிப்பது மிகுந்த நன்மையை தரும் என்கின்றனர். இதனால், இந்த அருவியில் குளிக்க பலரும் விரும்பி செல்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 79

    கோடையில் ஜில்லென்று குளித்து மகிழ நெல்லை மாவட்டத்தில் உள்ள தேங்காய் உருளி அருவிக்கு ஒரு ட்ரிப் போகலாம்!

    தேங்காய் உருளி அருவி குடும்பத்துடன் வந்து குளித்து என்ஜாய் பண்ண அருமையான இடமாகும். இவ்வாறு வரும்போது நீங்குள் உங்களுக்கான உணவை கையோடு கெண்டுவந்து, குளித்துதபின்னர் சாப்பிட்டு தெம்பாகத் திரும்பலாம். அங்கு குரங்குகள் இருக்கம் அதனிடம், நீங்கள் கொண்டு செல்லும் பொருட்களை பறிகொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES

  • 89

    கோடையில் ஜில்லென்று குளித்து மகிழ நெல்லை மாவட்டத்தில் உள்ள தேங்காய் உருளி அருவிக்கு ஒரு ட்ரிப் போகலாம்!

    இந்த அவியில் இருந்து சிறிது தூரத்தில்தான் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் இருக்கிறது. அங்கு பல அரிய வகை வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் விலங்குகள்கள் இருக்கின்றன. அப்படியே அங்கும் ஒரு விசிட் அடிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 99

    கோடையில் ஜில்லென்று குளித்து மகிழ நெல்லை மாவட்டத்தில் உள்ள தேங்காய் உருளி அருவிக்கு ஒரு ட்ரிப் போகலாம்!

    தேங்காய் உருளி அருவி அருகே பாறையில் ராமர், லட்சுமணர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் இருக்கின்றன. அதனையும் பார்த்து வராலம். இந்த அருவி பயணம் உங்களுக்கு அட்டகாசமான அனுபவத்தி கொடுக்கும். இங்கு செல்ல இப்போதே திட்டமிடுங்கள்.

    MORE
    GALLERIES