நள்ளிரவு நேரத்திலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர் சிகர நிகழ்ச்சியான சுவாமி நெல்லையப்பர் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு காலை 9 மணி 25 நிமிடங்களுக்கு தொடங்கியது தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சட்டமன்ற உறுப்பினர்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் விழாவில் கலந்துகொண்டு லட்சக்கணக்கான பக்தர்களுடன் இணைந்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரின் பின்பக்கம் பெரிய மரக்கட்டைகளை கொண்டு தடி போட்டு முன் பக்கத்தில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்கும் நிகழ்வு முழுவதும் மனித சக்தியால் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருத்தேர் ஓட்டம் நடைபெறுகிறது 516 வது ஆண்டாக இந்த தேரோட்டம் நடைபெறும் நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருநெல்வேலி திரு தேரோட்டத்தில் கலந்துகொண்டு சுவாமி அம்பாளின் அருள் பெற்று செல்கின்றனர்.
முன்னதாக காலை 7 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேர்களில் எழுந்து அருளினர் சுவாமி நெல்லையப்பர் திரு தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது ரத வீதிகளில் உள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது தேர் கடைகளை தாண்டி சென்ற பிறகே அவர்கள் வணிகத்தை தொடங்குகின்றனர்.
திரு தேரோட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் மாநகர காவல் துறை அவிநாஷ் குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர் 2 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வந்து செல்கின்றனர் என்பதால் குற்ற சம்பவங்கள் நடக்கா வண்ணம் குற்ற தடுப்பு பிரிவு சிறப்பு போலீசார் 50 பேர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.