ஹோம் » போடோகல்லெரி » தூத்துக்குடி » 90ஸ் கிட்ஸ்களின் favourite ஆன தூக்கணாங்குருவிகள்.. கூடு கட்டும் அழகை ரசிக்கும் விளாத்திகுளம் மக்கள்!

90ஸ் கிட்ஸ்களின் favourite ஆன தூக்கணாங்குருவிகள்.. கூடு கட்டும் அழகை ரசிக்கும் விளாத்திகுளம் மக்கள்!

விளாத்திகுளத்தில் மழை பெய்து பச்சை பசேல் என காட்சியளிப்பதால், மீண்டும் தூக்கனாங் குருவிகள் கூடு கட்ட தொடங்கியுள்ளன. செய்தியாளர்: மகேஷ்வரன்.

 • Local18
 • 18

  90ஸ் கிட்ஸ்களின் favourite ஆன தூக்கணாங்குருவிகள்.. கூடு கட்டும் அழகை ரசிக்கும் விளாத்திகுளம் மக்கள்!

  விளாத்திகுளத்தில் அதிகளவில் தூக்கணாங்குருவிகள் கூடும் கட்டும் அழகினை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து செல்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 28

  90ஸ் கிட்ஸ்களின் favourite ஆன தூக்கணாங்குருவிகள்.. கூடு கட்டும் அழகை ரசிக்கும் விளாத்திகுளம் மக்கள்!

  தெற்கு ஆசியா மற்றும் இந்தியாவில் அதிகமாக காணப்படும் குருவி வகை தான் தூக்கணாங்குருவி. இவை கூட்டம் கூட்டமாக கூடுகள் கட்டி வாழும் குணம் கொண்டவை. அதிகளவு வயல் வெளிகள், தானிய பயிர்கள் விளைந்து இருக்கும் விவசாய நிலங்கள் அருகே இருக்கும் மரங்களில் தூக்கணாங்குருவி கூடுகளை காணமுடியும்.

  MORE
  GALLERIES

 • 38

  90ஸ் கிட்ஸ்களின் favourite ஆன தூக்கணாங்குருவிகள்.. கூடு கட்டும் அழகை ரசிக்கும் விளாத்திகுளம் மக்கள்!

  தூக்காணங்குருவிகளை பொறியாளர்கள் என்று கூறும் அளவிற்கு கூடுகள் கட்டும் அழகு அலாதியனது. பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகிலும், தண்ணீர் பரப்பின் மேல் சாய்ந்த மரக்கிளைகளிலும் கூடுகளை அமைப்பிதினை தூக்கணாங்குருவிகள் வழக்கமாக கொண்டுள்ளன.

  MORE
  GALLERIES

 • 48

  90ஸ் கிட்ஸ்களின் favourite ஆன தூக்கணாங்குருவிகள்.. கூடு கட்டும் அழகை ரசிக்கும் விளாத்திகுளம் மக்கள்!

  தங்களுக்கான இரை, குடிநீர் என அனைத்து ஒருங்கிணைந்து கிடைக்கும் வகையில் இருப்பிடத்தினை தூக்கணாங்குருவிகள் அமைத்துக்கொள்ளும். பாம்பு, காகம் இவற்றிடம் இருந்து தப்பித்து கொள்ளும் வகையிலும் தங்களது இருப்பிடத்தினை இவ்வாறு தூக்கணாங்குருவிகள் அமைத்துக்கொள்கின்றன. அதிலும் ஆண் தூக்கணாங்குருவிகள் தான் கூடுகள் அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 58

  90ஸ் கிட்ஸ்களின் favourite ஆன தூக்கணாங்குருவிகள்.. கூடு கட்டும் அழகை ரசிக்கும் விளாத்திகுளம் மக்கள்!

  விவசாய நிலங்களை சுற்றி இருக்கும் கூடுகள், கீச்,கீச் என தூக்கணாங்குருவி எழுப்பு சத்தங்கள் என ஒரு காலத்தில் பரவி இருந்த நிலையில் தற்போது இந்த பறவையினங்கள் அழிவை நோக்கி சென்று விட்டன என்பது மறுக்கமுடியாத உண்மை.

  MORE
  GALLERIES

 • 68

  90ஸ் கிட்ஸ்களின் favourite ஆன தூக்கணாங்குருவிகள்.. கூடு கட்டும் அழகை ரசிக்கும் விளாத்திகுளம் மக்கள்!

  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் மானவாரி விவசாயம் அதிகம் என்பதால் எளிதில் தூக்கணாங்குருவிகளை பார்க்க கூடிய காலம் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வறட்சி, போதிய மழையின்மை போன்ற காரணங்களால் பெருமளவு விவசாயம் பாதிக்கப்பட்டதால் தூக்கணாங்குருவி கூடுகளை பார்க்க முடியவில்லை.

  MORE
  GALLERIES

 • 78

  90ஸ் கிட்ஸ்களின் favourite ஆன தூக்கணாங்குருவிகள்.. கூடு கட்டும் அழகை ரசிக்கும் விளாத்திகுளம் மக்கள்!

  இந்தாண்டு விவசாயம் சற்று அதிகாரித்து உள்ளதால், ராபி பருவத்தில் விளாத்திகுளம் பகுதியில் கம்பு, பாசி, சோளம், உளுந்து, மல்லி, மிளகாய், மக்காச்சோளம் என் பயிர்களை விசாயிகள் பயிரிட்டுள்ளனர். மேலும் பரவலாக மழை பெய்து வருவால் விளாத்திகுளம் பகுதியில் பச்சை பசேல் என நிலங்கள் காட்சியளிக்கும் நிலை இருப்பதால் மீண்டும் துக்கணாங்குருவிகள் கூடுகளை பல இடங்களில் காணக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 88

  90ஸ் கிட்ஸ்களின் favourite ஆன தூக்கணாங்குருவிகள்.. கூடு கட்டும் அழகை ரசிக்கும் விளாத்திகுளம் மக்கள்!

  தானிய பயிர்கள் பயிரிட்டுள்ள நிலங்கள் அருகே இருக்கும் சீமை கருவேலமரங்கள், பனைமரங்களில் தூக்கணாங்குருவிகள் தங்களது கூடுகளை அமைத்து  வருகின்றனர். தூக்கணாங்குருவிகள் கூடுகள் அமைப்பதை அப்பகுதியில் உள்ள மக்கள், குழந்தைகள் எல்லோரும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

  MORE
  GALLERIES