இன்று தைப்பூசம் திருவிழாவினை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூபம் தீபாராதனையும், 2.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 3.00 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 7.00 மணிக்கு அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் காவடி சுமந்தும், அலகுவேல் குத்தியும் பாதயாத்திரையாக வந்திருந்த பக்தர்கள் கோயிலில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக லட்சகக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இதனால் கோயில் கடற்கரை மற்றும் கோயில் வளாகம் பக்தர்களால் நிரம்பி திருவிழா போல் காட்சியளிக்கிறது.