பொங்கல் பண்டிகையொட்டி புதியம்புத்தூர் ஆட்டு சந்தையில் ஒன்றரை கோடிக்கு ஆடுகள் விற்பனை
பொங்கல் பண்டிகை ஒட்டி தூத்துக்குடி அருகே புதியம்புத்தூரில் நடந்த ஆட்டுச் சந்தையில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது செய்தியாளர் : முரளி கணேஷ்
தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதியில் நடைபெறும் முக்கிய ஆட்டுச் சந்தைகளில் ஒன்று புதியம்புத்தூர் ஆட்டுச் சந்தை. இன்று இங்கு பொங்கல் பண்டிகையொட்டி சிறப்பு ஆட்டுச் சந்தை நடைபெற்றது.
2/ 6
இதில் குறுக்குச்சாலை, எப்போதும் வென்றான், பாஞ்சாலங்குறிச்சி, வேடநத்தம், ஓட்டப்பிடாரம், கவர்னகிரி, தட்டாப்பாறை, புதுக்கோட்டை, வாகைகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது
3/ 6
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்க வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளின் வளர்ச்சிக்கும், திரட்சிக்கும் ஏற்றபடி ஆட்டுக்குட்டிகளை ரூபாய் 1500 இருந்து பெரிய உயரமான ஆடுகளை 54 ஆயிரம் ரூபாய் வரை பேரம் பேசி வாங்கி சென்றனர்.
4/ 6
காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டுச் சந்தை காலை 10 மணி வரை நடைபெற்றது.
5/ 6
குறுக்குச்சாலை, எப்போதும் வென்றான், பாஞ்சாலங்குறிச்சி, வேடநத்தம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்கி சென்றனர்
6/ 6
இதில் சுமார் 1500 க்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது.