யில் வெளிநாட்டினர் தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து மண்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர். யில் உள்ள “கிளாசிக் ரன்” என்ற தனியார் சுற்றுலா நிறுவனம் கடந்த 16 வருடங்களாக வெளிநாட்டினர் பங்குபெறும் “ஆட்டோ சேலஞ்ச்” என்ற ஆட்டோ சுற்றுலாப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்டோ சேலஞ்ச் சுற்றுலாப் பயணம் கடந்த 28-ம் தேதி சென்னையில் தொடங்கியது. அமெரிக்கா, நியூசிலாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, நார்வே, இஸ்தோனியா உள்ளிட்ட 6 நாடுகளைச் சேர்ந்த 37 பேர் கலந்து கொண்டு ஆட்டோவில் 17 அணியாகப் பிரிந்து 17 ஆட்டோக்களில் சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை வழியாக தூத்துக்குடி வந்தனர்.