மேற்கு இந்திய பஹாமாஸ் தீவு கொடியுடன் வந்த எம். எஸ். அமிரா என்ற பயணிகள் கப்பலானது 204 மீட்டர் நீளமும், அதிகபட்சம் 44.8 மீட்டர் காற்று வரைவு, 13 அடுக்குகள் மற்றும் 413 தங்கும் அறைகளுடன், 835 பயணிகளைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது. ஜெர்மனியிலுள்ள பெர்ன்ஹார்ட் ஷீல்ட் பயணிகள் சேவை மூலம் இயக்கப்படும் இப்பயணிகள் கப்பலில் மூன்று உணவங்கள், ஓய்வறைகள், நூலங்கள், விளையாட்டு, அழகு மற்றும் ஆரோக்கியத்திற்காக அறைகள் மற்றும் நீச்சல் குளங்கள் அமைந்திருப்பது சிறப்பம்சம் ஆகும்.
சுற்றுலா பயணிகள் 70 பேர் திருநெல்வேலியிலுள்ள புனித திரித்துவ தேவாலயம் மற்றும் நெல்லையப்பர் கோயிலுக்கும், 200க்கு மேற்ப்பட்ட சுற்றுலா பயணிகள் தூத்துக்குடியில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான புனித பனிமய அன்னை பேராலயம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றனர். மீண்டும் இப்பயணிகள் கப்பலானது இன்று மாலை கொலும்பு துறைமுகதிற்கு தனது பயணத்தை துவங்குகிறது.
இந்த கப்பலில் பயணித்த உக்ரைன் நாட்டைச் சேர்ந்த செர்கிம் நியூஸ் 18 அளித்த பேட்டியில், இந்தியா ஒரு அழகான நாடு எங்களுக்கு இந்தியாவிற்க்கு வந்ததில் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இங்க பலவிதமான கலாச்சாரங்கள் உள்ளன. இந்த கப்பல் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடத்திற்கு வந்திருக்கிறது. நல்ல மக்கள், அன்பான மக்கள் கலாச்சாரத்துடன் கூடிய வரவேற்பை மக்கள் கொடுத்தனர். நாங்கள் ஒரு குழுவாக இங்கு உள்ள கோயில்களுக்கு செல்ல இருக்கிறோம். ஒரு நல்ல இடத்திற்கு வந்திருக்கிறோம் நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க இருக்கிறோம். இங்குள்ள மக்கள் நன்கு பழகுகிறார்கள். இந்திய கலாச்சாரங்களை நான் ரொம்ப விரும்புகிறேன். இந்திய கலாச்சாரத்துடன் இணைந்து அவற்றை அனுபவித்து வருகிறோம்.