அருகே எம்.சத்திரப்பட்டியில் கடந்த மாதம் 30ந்தேதி நடைபெற்ற தமிழரின் வீரத்தினை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டியில் முதன் முறையாக வர்ணணையாளர்களாக இருபெண்கள் களம் இறங்கி காளை மற்றும் காளையர்களின் வீரத்துடன் இவர்களில் கலகலப்பு வர்ணணையும் அந்த ஜல்லிக்கட்டு போட்டியை மெருகேற்றியது மட்டுமின்றி, அனைவரின் கவனத்தினையும் ஈர்த்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாலைப்புதூர் இ.பி.காலனியை சேர்ந்தவர் அன்னபாரதி. பட்டிமன்ற பேச்சாளர், நகைச்சுவை பேச்சாளர் என்ற அனைவராலும் அறியப்பட்ட அன்னபாரதி, சின்னத்திரை, திரைப்படத்துறை என தனது பங்களிப்பனை அளித்து அசத்தி வரும் அன்னபாரதி முதன் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியில் வர்ணணையாளராக மாறி தனது இன்னொரு திறமையை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
கலகலப்பு பேச்சுக்கு பெயர் போன அன்னபாரதி வீரம், வேகம், விவேகம் என தமிழரின் பண்பாடு, பாரம்பரியத்தினை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு களத்தில் களம் இறங்கி கவிதை, பாடல், பஞ்ச் வசனங்கள் என்று பேசி அனைத்து தரப்பினரையும் உற்சாகப்படுத்தினார். ஜல்லிக்கட்டு வர்ணனை குறித்து நமது நியூஸ் 18 தொலைக்காட்சியுடன் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ’பட்டிமன்றம் என்பது ஒரு களம். ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் பேசுவோம், ஆனால் ஜல்லிக்கட்டு களத்தில் வேகமாக ஓடிவரும் காளைகளுக்கு இடையே பேசுவது புதிய அனுபவமாக இருந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் பேசுவதற்காக என்னை தயார்படுத்தி கொண்டாலும், தமிழர்களின் மரபு வீரமும், காதலும் தான், அப்படிப்பட வீரத்திற்கும், காதலுக்கும் தமிழ் நூல்களில் பல வார்த்தைகள் உள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு வைத்து இருந்தாலும் ஜல்லிக்கட்டு களத்தில் நிறைய பஞ் வசனங்களுக்கு வரவேற்பு இருந்தது.
ஜல்லிக்கட்டு தொடர்பான கவிதைகள், பாடல்கள் பாடிய போது வீரர்கள் உற்சாகமடைந்தது மட்டுமின்றி, தொடர்ந்து அது போன்று பேச வலியுறுத்தினர்கள், ஜல்லிக்கட்டை டிவியில் தான் பார்த்து உண்டு, தனது தந்தை ஒரு விவசாயி, அவர் டிவியில் ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் பார்ப்பது உண்டு, அவருடன் இணைந்து பார்த்து. உண்டு, முதன் முறையாக ஜல்லிக்கட்டை நேரில் பார்த்தது மட்டுமின்றி, அதில் வர்ணணை செய்யும் வாய்ப்பு கிடைத்தது குறித்து தமிழச்சியாக நான் பெருமை கொள்கிறேன்.
ஆண் இல்லமால் பெண் வாழ்ந்து விடலாம். ஆனால் ஒரு பெண் இல்லமால் ஆண் வாழமுடியாது என்பார்கள். ஆண்களின் தன்னம்பிக்கையே பெண்கள் தான். கோவையில் ஷர்மிளா என்ற பெண் பேருந்து ஓட்டுகிறார். அது நிறைய வரவேற்பு பெற்றுள்ளது. உடல் சார்ந்த பிரச்னைகள் பெண்களுக்கு இருந்தாலும், அதனையும் தாண்டி பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். அதற்கு ஆண்களும் உதவுகின்றனர். அதனை நாம் வரவேற்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வர்ணணையாளராக பணியாற்ற போது நிறைய வரவேற்புகள், தமிழக அமைச்சர்கள் பலரும் பாராட்டினர். இருந்தாலும் மாடுபிடி வீரர்கள் பாராட்டு தான் எனக்கு மகிழ்ச்சி தந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் வர்ணணையாளராக பேச பலரும் அழைக்கின்றனர். வெயிலின் தாக்கம் தான் அதிகமாக இருந்தது. காலையில் இருந்து மாலை வரை சாப்பிடாமல் வர்ணணையாளராக பேசியதாக தெரிவித்துள்ளார்.