ஹோம் » போடோகல்லெரி » தூத்துக்குடி » 3 ஆண்டுகளுக்குப்பின் மக்கள் வெள்ளத்தில் காட்சியளித்த விளாத்திகுளம் வைப்பாறு.. குடும்பம் குடும்பமாக வந்து குதூகல பொங்கல் கொண்டாட்டம்...
3 ஆண்டுகளுக்குப்பின் மக்கள் வெள்ளத்தில் காட்சியளித்த விளாத்திகுளம் வைப்பாறு.. குடும்பம் குடும்பமாக வந்து குதூகல பொங்கல் கொண்டாட்டம்...
Vaiparu Pongal Celebration : 3 ஆண்டுகளுக்கு பின் மக்கள் வெள்ளத்தில் காட்சியளித்த விளாத்திகுளம் வைப்பாறு. குடும்பம் குடும்பமாக வந்து குதூகல பொங்கல் கொண்டாட்டம். செய்தியாளர் : மகேஸ்வரன் - கோவில்பட்டி
தைப்பொங்கல் விடுமுறையையொட்டி மாவட்டம் விளாத்திகுளத்தில் ஆண்டுதோறும் பல கிராமத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் விளாத்திகுளம் வைப்பாற்றுக்கு தங்களது குடும்பங்களுடன் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
2/ 6
அவ்வாறு செல்லும்போது வீட்டில் சமைத்த உணவுகள், திண்பண்டங்கள், கரும்பு பணங்கிழங்கு உள்ளிட்டவற்றை ஆற்றுக்கு கொண்டு வந்து அங்கு சந்திக்கும் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு அவற்றை கொடுத்து தங்களது அன்பை பரிமாறிக்கொள்வர்.
3/ 6
அந்த வகையில் அவர்களுடன் சேர்ந்து விளையாடி ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்று மகிழ்ச்சியாக பொங்கல் விடுமுறையை கழித்து வருகின்றனர்.
4/ 6
ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் இந்த வைப்பாற்றில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
5/ 6
இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு இன்று வைப்பாற்றுக்கு உற்சாகம் பொங்க மகிழ்ச்சியாக தங்களது குடும்பத்துடன் வந்து பொங்கல் விடுமுறையை கொண்டாடினர்.
6/ 6
இதனால் விளாத்திகுளம் வைப்பாறானது மக்கள் வெள்ளத்தில் நிரம்பி காணப்பட்டது.