சுருளி அருவிக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி.. ஆனந்தமாய் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்..
Cumbum Suruli Falls : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் பருவ காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியிலும் தொடர் மழை பெய்து வருகிறது.
2/ 7
சுருளி வனப்பகுதியிலும்,அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை, மேகமலை வட்டாரங்களிலும் தொடர் மழை பெய்து வந்தது. ஹைவிவேஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் ஏரியிலிருந்து சுருளி அருவிக்கு நீர்வரத்து ஏற்படும்.
3/ 7
தூவானம் ஏறியிலிருந்து திறக்கப்படும் தண்ணீரும் மலைப்பகுதியில் பெய்கிற மழை நீரும் சேர்ந்து சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக மூலிகைச் செடிகளில் கலந்து சுருளி அருவியாக கொட்டுகிறது.
4/ 7
இந்தப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக, சுருளி அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஏற்பட்டது. சுருளி அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை சார்பாக தடை விதிக்கப்பட்டது.
5/ 7
பொதுமக்கள் யாரும் அருவி பகுதிக்கு செல்லாதவாறு வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சுருளி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நின்றதால் நேற்று முதல் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை சார்பில் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
6/ 7
தற்போது சுருளி அருவியில் குறைந்த அளவிலான நீர்வரதே உள்ளது குறிப்பிடத்தக்கது.
7/ 7
சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்