மாவட்டத்தில் வருசநாடு மலைப்பகுதியில் உருவாகி ஓடி வரும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைகை அணை 111 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் 71 அடி நீரைத் தேக்கி சேமித்து வைக்க முடியும். அணையில் நீர் நிரம்பி இருக்கும்போது, அதன் பின்புறத்தில் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் மேற்கு தொடர்ச்சி மலையுடன் காட்சியளிக்கும்.
இந்த அணையின் முன்புறமுள்ள சிறிய பாலத்தின் வழியே இரு புறமும் உள்ள பூங்காக்களுக்குச் செல்ல முடியும். இந்தப் பூங்காவின் ஒரு பகுதியில் சிறுவர்கள் விளையாடி மகிழ விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவின் ஓரிடத்தில் தண்ணீர் ஆறு போல் மேலிருந்து கீழ் நோக்கி வரும் வகையில் செயற்கையான அமைப்பும் செய்யப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் சில மீட்டர் தூரம் வரை பாய்ந்து இறுதியில் சின்ன அணை போன்ற அமைப்பின் வழியாக வெளிவந்து ஒரு அரக்கன் வாயின் வழியே வெளியேறும்படி செய்யப்பட்டுள்ளது. அணையின் முன்புற கரை மீது பாதை அமைக்கப்பட்டுள்ளது.
நவரச நாயகன் கார்த்திக் நடித்த ‘பகவதிபுரம் ரயில்வே கேட்’ படத்தில் வரும் ‘செவ்வரளி தோட்டத்திலே உன்ன நினைச்சேன்’ பாடல் இந்த வைகை அணையில்தான் ஷூட் செய்யப்பட்டது. சிந்துநதிப்பூவே படத்தில் வரும் ‘மத்தாளம் கொட்டுதடி மனசு இது மல்லியப்பூ மணக்குற வயசு’ பாலின் சில காட்சிகள் இந்த வைகை அணையில் படம்பிடிக்கப்பட்டது.