கல்மண்டபத்துக்குள் 20 அடி நீளமும், 10 அடி உயரமும் கொண்ட சமணப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. பார்சுவநாதர் சிற்பத்தின் தலைக்கு மேல் 5 தலை நாகம் காணப்படுகிறது. பக்கவாட்டில், சாமரம் வீசும் பெண் சிற்பங்களும், அந்த சிற்பங்களின் அருகே, வட்டெழுத்துக்களால் ஆன வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.