முகப்பு » புகைப்பட செய்தி » தேனி » கண்களுக்கு விருந்து படைக்கும் கம்பம் பள்ளத்தாக்கு - திராட்சை தோட்டங்களும், பசுமையும் ஆளையே மயக்கும்!

கண்களுக்கு விருந்து படைக்கும் கம்பம் பள்ளத்தாக்கு - திராட்சை தோட்டங்களும், பசுமையும் ஆளையே மயக்கும்!

kambam pallathakku | தேனி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருக்கும் கம்பம் பள்ளத்தாக்கு பசுமையும், அழகும் தவழும் பகுதியாகும். இந்த பகுதிக்கு சுற்றுலா வெல்வது அலாதியான இன்பத்தைக் கொடுக்கும்.

 • 110

  கண்களுக்கு விருந்து படைக்கும் கம்பம் பள்ளத்தாக்கு - திராட்சை தோட்டங்களும், பசுமையும் ஆளையே மயக்கும்!

  மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருக்கும் கம்பம் பள்ளத்தாக்கு பசுமையும், அழகும் தவழும் பகுதியாகும். இந்த பகுதிக்கு சுற்றுலா வெல்வது அலாதியான இன்பத்தைக் கொடுக்கும்.

  MORE
  GALLERIES

 • 210

  கண்களுக்கு விருந்து படைக்கும் கம்பம் பள்ளத்தாக்கு - திராட்சை தோட்டங்களும், பசுமையும் ஆளையே மயக்கும்!

  தேனி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு இடையில் பசுமை நிறைந்த அழகான பள்ளத்தாக்குப் பகுதிதான் கம்பம் பள்ளத்தாக்கு. மேற்கே ஏலமலையையும், தெற்கே சுருளி மலையையும் கிழக்கே வருசநாட்டுக் குன்றுகளையும் கொண்டதாக திகழ்கிறது இந்த பள்ளத்தாக்கு.

  MORE
  GALLERIES

 • 310

  கண்களுக்கு விருந்து படைக்கும் கம்பம் பள்ளத்தாக்கு - திராட்சை தோட்டங்களும், பசுமையும் ஆளையே மயக்கும்!

  இந்தப் பள்ளத்தாக்கு பகுதியை முல்லைப் பெரியாறு வளப்படுத்தி பசுமையாக்குகிறது. தேனி, கம்பம், கமயகவுண்டன் பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர் மற்றும் கூடலூர் ஆகியவை இந்தப் பள்ளத்தாக்கில் உள்ள முக்கிய நகரங்களாகும்.

  MORE
  GALLERIES

 • 410

  கண்களுக்கு விருந்து படைக்கும் கம்பம் பள்ளத்தாக்கு - திராட்சை தோட்டங்களும், பசுமையும் ஆளையே மயக்கும்!

  பசுமை போர்த்திய தேயிலை தோட்டங்களும், மடிந்து வளைந்து பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் மலைத் தொடரும், கண்களை கவரும். இந்த அழகில் சுற்றுலாப் பயணிக கண்களை இமைக்கவும் மறந்துபோகலாம்.

  MORE
  GALLERIES

 • 510

  கண்களுக்கு விருந்து படைக்கும் கம்பம் பள்ளத்தாக்கு - திராட்சை தோட்டங்களும், பசுமையும் ஆளையே மயக்கும்!

  தேனி மாவட்ட பகுதிகளில் அதிக அளவில் நடைபெறும் பசுமை நிறைந்த நெல் விசயத்தையும், கொத்துக் கொத்தாய் தொங்கும் திராட்சை தோட்டங்களையும் கண்டு ரசிக்கலாம். இந்த பகுதிக்கு சென்றால் மனதும் கூட ரெக்கை கட்டி பறக்கும். இந்த பகுதியின் அழகு ஆளையே மயக்கும்.

  MORE
  GALLERIES

 • 610

  கண்களுக்கு விருந்து படைக்கும் கம்பம் பள்ளத்தாக்கு - திராட்சை தோட்டங்களும், பசுமையும் ஆளையே மயக்கும்!

  இந்த பகுதியில் திராட்சை தோட்டங்கள், தென்னை மரங்கள், வாழை தோப்புகள் ஆகியவற்றை அதிக அளவில் பார்க்க முடியும். இப்பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கமயகவுண்டன் பட்டி, ஓடைப்பட்டி, சுருளிப்பட்டி மற்றும் கூடலூர் முதலான ஊர்கள் கறுப்புத்திராட்சை உற்பத்திக்கு பிரபலமானவை.

  MORE
  GALLERIES

 • 710

  கண்களுக்கு விருந்து படைக்கும் கம்பம் பள்ளத்தாக்கு - திராட்சை தோட்டங்களும், பசுமையும் ஆளையே மயக்கும்!

  கேரள மாநிலம் மூணாறு, தேக்கடி மற்றும் குமுளி போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும். அவ்வாறு, கேரள மாநிலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள், தேனி மாவட்டத்தில் உள்ள குளிர்ந்த அருவிகள், பசுமை நிறைந்த பகுதிகள் என பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் செல்வது வழக்கம்.

  MORE
  GALLERIES

 • 810

  கண்களுக்கு விருந்து படைக்கும் கம்பம் பள்ளத்தாக்கு - திராட்சை தோட்டங்களும், பசுமையும் ஆளையே மயக்கும்!

  குமுளி மலைப்பாதையை ஒட்டியுள்ள லோயர்கேம்ப் அருகே சுரங்கனாறு அருவி, சுருளி அருவி, வைரவனார் அணை, மங்கல தேவி கண்ணகி கோயில், பழங்குடியின மக்கள் வசிக்கும் பளியன்குடி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 910

  கண்களுக்கு விருந்து படைக்கும் கம்பம் பள்ளத்தாக்கு - திராட்சை தோட்டங்களும், பசுமையும் ஆளையே மயக்கும்!

  பொதுவான நாள்தோறும் சுமார் 5,000 சுற்றுலாப் பயணிகள் தேனி மாவட்ட பகுதிகளுக்கு வந்து செல்வதாக சொல்லப்படுகிறது. விடுமுறை காலங்களில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து நாள்தோறும் பத்தாயிரம் என்ற அளவிலும், சில நேரங்களல் பதினைந்தாயிரமாகக்கூட சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை இருக்கும் என்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 1010

  கண்களுக்கு விருந்து படைக்கும் கம்பம் பள்ளத்தாக்கு - திராட்சை தோட்டங்களும், பசுமையும் ஆளையே மயக்கும்!

  விடுமுறை நாட்களில் பசுமையும், அமைதியும், குளிச்சியும், பேரழகும் கொண்ட இடங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் இந்த கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளையும், அருகில் இருக்கும் பிலபல அருவிகளையும் தேர்ந்தெடுத்து சென்று, பார்த்து இன்புற்று களிக்கலாம்.

  MORE
  GALLERIES