ஹோம் » போடோகல்லெரி » தேனி » சுருளி அருவிக்கு குளிக்கப் போறீங்களா... அப்போ இதை கட்டாயம் படிங்க

சுருளி அருவிக்கு குளிக்கப் போறீங்களா... அப்போ இதை கட்டாயம் படிங்க

Suruli Falls | தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த அருவியைப் பற்றியும், வனத்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு குறித்தும் தெரிந்துகொள்வோம்.

 • 17

  சுருளி அருவிக்கு குளிக்கப் போறீங்களா... அப்போ இதை கட்டாயம் படிங்க

  மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில். உத்தமபாளையத்தில் இருந்து 18 கி.மீ தொலைவிலும், கம்பத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இயற்றை எழில் சூழ்ந்த சுற்றுலா தலமான சுருளி அருவி.

  MORE
  GALLERIES

 • 27

  சுருளி அருவிக்கு குளிக்கப் போறீங்களா... அப்போ இதை கட்டாயம் படிங்க

  சுமார் 40 அடி உயரம் கொண்ட இந்த அருவியில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் இந்த அருவியின் அழகையும் சிறப்பையும் பற்றி கூறியிருப்பார். இங்கு கீழ்ச் சுருளி, மேல் சுருளி என இரு இடங்கள் இருக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 37

  சுருளி அருவிக்கு குளிக்கப் போறீங்களா... அப்போ இதை கட்டாயம் படிங்க

  இந்த சுருளி அருவி சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக இருந்து வருகிறது. இந்த அருவியில் குளித்துவிட்டு அருகில் உள்ள சுருளி வேலப்பர், விபூதி குகை கோவில், கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

  MORE
  GALLERIES

 • 47

  சுருளி அருவிக்கு குளிக்கப் போறீங்களா... அப்போ இதை கட்டாயம் படிங்க

  இந்நிலையில் மேற்குதொடர்ச்சி மலை மற்றும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  சுருளி அருவிக்கு குளிக்கப் போறீங்களா... அப்போ இதை கட்டாயம் படிங்க

  இதனால், சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்துள்ளனர். இந்த அறிவிப்பை அறியாமல் அந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும், அய்யப்ப பக்தர்களுக்கும் வனத்துறையினர், அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 67

  சுருளி அருவிக்கு குளிக்கப் போறீங்களா... அப்போ இதை கட்டாயம் படிங்க

  சுருளி அருவியில் குளிப்பதற்கு யாரும் வர வேண்டாம் என்று வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் மறு அறிவிப்பு வரும் வரையில், சுருளி அருவிக்கு செல்லவதை தவிரித்துவிடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 77

  சுருளி அருவிக்கு குளிக்கப் போறீங்களா... அப்போ இதை கட்டாயம் படிங்க

  மழை குறைந்தால் வெள்ளப்பெருக்கும் குறைந்து, அருவியில் சீரான தண்ணீர் கொட்டும், அப்போது வனத்துறையினர் மறு அறிவிப்பை வெளியிடுவார்கள். இதேபோல மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES