முல்லைப்பெரியாற்றில் இருந்து வைரவன் வாய்க்கால் மூலம் கூட்டாறு வழியாக வினாடிக்கு 5 கனஅடி தண்ணீர் இந்த குளத்திற்கு 10 மாதங்களுக்கு திறந்துவிடப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் ஒட்டாண்குளத்திற்கு தண்ணீர் வரும் சுரங்கனார் நீர் வீழ்ச்சி அருகே கடந்த 2011ம் ஆண்டு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
ஆண்டுதோறும் சுரங்கனார் நீர் வீழ்ச்சி பகுதியில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு வரத்து வாய்க்கால் தூர்வாரப்படும். இதனால் தண்ணீர் தங்கு தடையின்றி வரும். ஆனால் கடந்த 2011ம் ஆண்டு அந்த பகுதியில் தூர்வார வனத்துறையினர் அனுமதி வழங்காததால் மழை காலங்களில் மணல்மேடுகள் ஏறி அந்தப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாகி கூட்டாறு வழியாக சென்று முல்லைப்பெரியாற்றில் கலக்கிறது என்று பாரதீய கிஷான் சங்கம் மாவட்ட தலைவர் சதீஷ் பாபு தெரிவித்துள்ளார்.
இதனால் 2 ஆயிரம் ஏக்கர் மானாவாரி விவசாயிகளும் பயன் அடைந்து வந்தனர். எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மத்திய வனத்துறையின் அனுமதி பெற்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று விவசாயிகள் சிலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.