அதற்கேற்றவாறு இந்த ஆலயத்தை சுற்றிலும் புற்றுகளால் சூழப்பட்டு காட்சியளிக்கிறது. புற்றுகளால் சூழப்பட்டுள்ளதாலும் காளகஸ்தி போன்று வாயு மூலையில் நீர்நிலை அருகில் அமைந்த சிவாலயமாகவும் உள்ளதால் சிறந்த ராகு கேது பரிகார தலமாகவும் கால சர்ப்ப தோஷம், நாக தோஷம், திருமண தடை நீக்கும் தலமாகவும் இந்த கீழச்சொக்கநாதர் கோவில் திகழ்கிறது.