அதுபோல இவ்வாண்டும் இவ்விழா இன்று முற்பகல் வள்ளி தெய்வானை சமேத சண்முகசுவாமி சிறப்புமலர் அலங்காரத்தில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரருடன் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேலுடன் கூடிய யானை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 9ம் நாளான திருக்கார்த்திகை தினமான 6ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை திருத்தேர் படம் பிடித்து திரு வீதி உலா இரவு தங்கமயில் வாகனத்தில் பிரகார உலாவும் அதனை தொடர்ந்து கார்த்திகை தீபக்காட்சியும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மறுநாள் காவிரி கரையில் தீர்த்தவாரியுடன் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நிறைவடைகிறது.