மாலையில் குரலிசை, திருமுறைப் பண்ணிசை அரங்கம், திருநெறி தமிழிசை நடைபெறவுள்ளன. இரவு 7 மணியளவில் நடைபெறும் நிறைவு விழாவில் தஞ்சாவூர் பெரிய கோயில் அகத்திய சன்மார்க்க சங்கச் செயலர் சிவ. அமிர்தலிங்கம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஓய்வு பெற்ற முதல்வர் பி.ஜி. சங்கரநாராயணன், சைவ சித்தாந்தப் பேராசிரியர் வீ. ஜெயபால் ஆகியோருக்கு மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கப்படவுள்ளது.