இவ்வளவு நுட்பமாக சிலைகளை வடிக்க முடியும்? என்று கண்களை அகல விரித்து வியக்கும் வகையில், ஒரு சிறிய இடத்தைகூட விட்டுவைக்கவில்லை என்று கூறும் அளவுக்கு ஏராளமான சிற்பங்களை இங்கே பார்கக முடியும், ‘அடிக்கு 1000 சிற்பங்கள்’ என்ற புகழ் மொழியையும் கொண்ட கோயிலாகத் திகழ்கிறது இந்த தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில். ஒரே சிற்பத்தில் காளையும், பாணையும் வடிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு புறத்தை மறைத்துப் பார்த்தால் யானை தெரியும், மறு புறத்தை மறைத்துப் பார்த்தால் காளை தெரியும்.
கோயிலுக்கு வெளியே நந்தி மண்டபத்துக்கு அருகே பலிபீடத்துக்கு ஏறும் படிகள் ஏழு ஸ்வரங்களை இசைக்கும் இசைப் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. எழு படியும் ஏழு ஸ்வரங்களான ‘ச ரி க ம ப த நி’ ஆகியவற்றின் ஓசையை எழுப்பும் என்கின்றனர். பாதுக்ப்பு கருதி இந்த இசை படிக்கட்டு இரும்பு கம்பி அமத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த தாராசுரம் கோயிலில் வேறெங்கும் காணமுடியாத, காணக்கிடைக்காத சிற்பங்களையும் பார்க்கலாம். சிற்பங்களின் கலையழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். நாள் முழுவதும் பார்த்தாலும், பாதி சிற்ங்களைச்சுட பார்த்துவிடமுடியாது. அத்தனை அழகான, நுட்பமான் சிறங்களும் இங்கே நிறைந்திருக்கின்றன. தஞ்சாவூர் சுற்றுலா லிஸ்டில் இது எக்காரணத்தைக் கொண்டும் மிஸ்ஸாகக்கூடாத சிறந்த சுற்றுலா தலமாகும்.