இந்த மனோரா கோட்டையானது அரச குடும்பத்தின் வசிப்பிடமாகவும், கலங்கரை விளக்கமாகவும் செயல்பட்டது. இந்த கோட்டை பற்றிய ஒரு கல் கல்வெட்டில், “பிரித்தானிய அரசின் ஆயுதங்களின் வெற்றிகளையும், நெப்போலியன் போனபார்ட்டின் வீழ்ச்சியையும் நினைவுகூரும் வகையில் ஆங்கிலேயரின் நண்பரும் கூட்டாளியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சரபோஜி மன்னர் அந்நாளில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்தனர்.
இந்த கோட்டைக்கு அருகில் சிறுவர்கள் விழையாடி மகிழ, அழகான பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ள. இந்த கோட்டையை பார்த்துவிட்டு, இந்த பார்க்கில் குழந்தைகளுடன விளையாடி மகிழலாம். அருகில் படகு சவாரியும் இருக்கிறது. தஞ்சாவூருக்கு சுற்றலா செல்ல திட்டமிடுபவர்கள், உங்களின் பயண திட்டத்தில் இந்த கோட்டையை தவறாமல் இணைத்து பார்த்து மகிழுங்கள்.